Coronavirus

கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு சோதனை துவக்கம்

இந்தியாவின் முதலாவது உள்நாட்டு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் சோதனையை நடத்த ஐசிஎம்ஆர் தேர்ந்தெடுத்துள்ள 12 நிறுவனங்களில் ஒன்றான டெல்லி எய்ம்சில், ஐந்து பேருக்கு முதற்கட்ட சோதனை இன்று துவக்கப்படுகிறது.

டெல்லி எய்ம்சில் ஆரோக்கியமான 100 நபர்களிடம் முதற்கட்ட சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க உள்ளவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்து கொண்டிருப்பதாவும், எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் தடுப்பூசி சோதனைகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் பத்து பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு அதில் கிடைக்கும் முடிவுகளை எய்ம்ஸ் மருத்துவமனையின் நெறிமுறை குழுவினர் ஆராய்ந்த பின்னர் எஞ்சியவர்களுக்கு சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

இதனிடையே தடுப்பூசி சோதனைக்கு தாமாக முன்வந்துள்ள 3500 பேருக்கு நீரிழிவு, ரத்தகொதிப்பு, சிறுநீரக நோய்கள், இருதய-கல்லீரல் பிரச்சனைகள் உள்ளனவா என சுமார் 50 வகையான பரிசோதனைகள் நடத்தப்பட்டு அவர்கள் சோதனைக்கு தகுதியானவர்களாக இருப்பது உறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் துணையுடன் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

Related posts

MS Dhoni tests negative for COVID19, to reach Chennai soon

Penbugs

Novak Djokovic tested positive for Coronavirus

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3095 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Still no clarity on our next series: Poonam Yadav

Penbugs

Karnataka: BS Yediyurappa tested Covid19 Positive, hospitalised

Penbugs

COVID19: More than 3000 contacts untraceable as Karnataka sees huge spike

Penbugs

COVID19 in Trichy: Patient recovers, gets a heartwarming sendoff

Penbugs

கொரோனா தடுப்பு மருந்து தமிழகம் வந்தது

Penbugs

‘Story of migrant’: Bihar’s Jyoti who cycled 1200km with her dad, to act in film about her life

Penbugs

75 Districts in India to go under Lockdown until March 31st

Lakshmi Muthiah

Borna Coric tested positive for COVID19

Penbugs

Leave a Comment