Coronavirus

தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கொரோனா தொற்று….!

தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தரவுகளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பு மூலம் வெளியிட்டார். இதன்படி, தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களைத் தவிர்த்தால் தமிழகத்தில் மட்டும் இன்று 384 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்திலிருந்து விமானம் மூலம் வந்த 4 பேருக்கும், மகாராஷ்டிரத்திலிருந்து தமிழகம் திரும்பியவர்களில் 81 பேருக்கும், குஜராத்திலிருந்து வந்த 7 பேருக்கும், ஆந்திரத்திலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 93 பேருக்கு இன்று கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 3 பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் மொத்தம் 939 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 10,535 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதன்மூலம், இங்கு மொத்தம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,13,639 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

Akshay Kumar donates Rs 25 Crore to PM relief fund

Penbugs

Would’ve loved to play IPL 2020 in India: RR skipper Steve Smith

Penbugs

தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பாதிப்பு

Penbugs

Mumbai: Doctor booked for ‘sexual assault’ on COVID-19 patient

Penbugs

Sonu Sood arranges buses to send 350 migrant workers home

Penbugs

Fearing COVID19, officials dump dead man in garbage van; suspended

Penbugs

Corona in TN: 104 new cases, 94 in Chennai

Penbugs

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை துவங்கியது ‌..!

Penbugs

Vaccine registration for 18-plus to begin by April 24

Penbugs

COVID19: 77 new positive cases in Tamil Nadu

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5106 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா மரணத்தில் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்

Penbugs