சரியா மார்ச் மாதம் தொடங்குச்சு
இந்த கொரோனா பிரச்சனை அப்போ
இருந்து நம்ம எல்லோர் காதுக்கும்
ஒரே அலைவரிசையில ஒலிக்குற
ஒரு வார்த்தைன்னா அது லாக்டவுன்- ன்றஇந்த வார்த்தை தான்,
ஊர் சுற்றித்திரிந்த வேடந்தாங்கல்
பறவையை சிறகுடைத்து நீ பறக்க
கால அவகாசம் இப்போது சரியாக
இல்லை கொஞ்ச நாள் இந்த கூண்டுக்குள்
அடைஞ்சு இருன்னு சொல்லுற மாதிரியான
உணர்வு தான் இங்க எல்லாருக்கும்,
பறவையோட குணமே பறக்குறது
தான்டான்னு சூப்பர் ஸ்டார் கபாலில
சொல்லுற மாதிரி நாலு ஊரு போய் நாலு
மனுஷங்கள சந்திச்சு பேசுறஆளுங்க
நம்ம,அப்படி இருக்கப்போ இந்த லாக்டவுன்
நம்மல எப்படி எல்லாம் தலைகீழாக புரட்டி
போட்டுச்சு,அதை பற்றி தான் இங்க பார்க்க
போறோம்,
இதில் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும்
போது அந்த ஒரு தனிமை நிலையை
ரசித்தவர்கள் யார்,அதை வெறுத்தவர்கள்
யார்,இதை பற்றி சில நண்பர்களிடம்
கருத்துக்கள் கேட்டிருந்தேன் அதில் சிலர்
சொன்ன கருத்துக்கள் வித்தியாசமாகவும்
அதே நேரத்தில் சற்று பயமாகவும்
இருந்தது,
——————–> ” தனிமை ” <——————–
நிறைய பேருக்கு வரம்
நிறைய பேருக்கு சாபம்
நிறைய பேருக்கு யுத்தம்,
இந்த லாக்டவுனில் தனிமை அவர் அவர்
வாழ்க்கையில் எப்படி எல்லாம் அதன்
பங்களிப்பை நிகழ்த்தி இருக்கிறது என நம்
நண்பர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்ட
தனிமை பற்றிய கருத்துக்களையும் அதில்
உள்ள சூழல் ஆகியவற்றை பார்ப்போம்,
நிறைய நண்பர்கள் கருத்துக்கள்
சொல்லியிருந்தாலும் சில நபர்களின்
கருத்துக்களை குறிப்பிட்டு நான் ரசித்தேன்
அதில் இங்கு சில,
தனிமையில் இருக்கும் போது கற்றுக்
கொள்வதை விட மன நிம்மதி தான் அதிகம்
எந்த தொல்லையும் இல்லாம நாம உண்டு
நம்ம வேலையுண்டு வாழுற வாழ்க்கை
போதும்,
- Prakash Veera
சாபம் அண்ணா,தேடிக்கிடைக்கிற
தனிமை சுகம்.,தேடப்படாம, மீளமுடியாம
ஒரு தனிமைல சிக்கிக்கிறது சாபம் மட்டும்
தான்,இங்க தனிமைத் திணிக்கப்படுது,
அதைத் தவிர வேற எதையும் உணர
முடியல,
- Mageshwar Murugesan
நான் ஒரு தனிமை விரும்பி,
எனக்கு தனிமை தரும் சௌகர்யம் கொஞ்சம் அதிகமே,ஆக Lock down
என்பது பெரியளவில் தாக்கத்தை
ஏற்படுத்தவில்லை,ஆனால்
தனிமையை கையாள தெரிய
வேண்டும்,தனிமையின் வேளைகளில்
மனநிலையும் சிந்தனைகளும் எப்படி
வேண்டும் என்றாலும் திரும்பலாம்,
ஆக அந்த சிந்தையை நம் கைக்குள்
வைத்துக்கொள்ள வேண்டும்,
தனிமை எப்போதுமே ஆக்கத்திறனான
ஒன்று,நம்மையும் வாழ்வையும்
புரிந்து கொள்ள இடமளிக்கும்,
So அந்த தனிமையை ஆக்கத்திறனாகவும்
அதேவேளை மனோதத்துவ ரீதியில்
சமநிலையில் பேணினால் தனிமை வரமே,
அதேவேளை தேடிச்செல்லும் தனிமை
வரம், சந்தர்ப்ப சூழ்நிலைகளில்
மீளமுடியாத அளவில் கிடைக்கும்
தனிமை சாபம்,ஆக தனிமை நமது
அல்லது நேரத்தின் தெரிவாகவோ அமையும்,
- Luxshan
தனிமை என்பது வரம் தான்,
தனிமையில் இருக்கும் போதுதான்
என் மனதை நல்லதெளிவான
எண்ணங்களால் மறுசீரமைப்பு
செய்துகொண்டும் என் வாழ்க்கையில்
வரும் சூழ்நிலைகளை எவ்வாறு
கடந்துவந்து மனத்தெளிவுடன் வெற்றியை
நோக்கி பயணிக்க என்ன செய்யவேண்டும்
என்று சிந்தித்து கொண்டு இருப்பேன்,
தேவையற்ற சிந்தனைகள் மற்றும்
எண்ணங்களை அழித்து நிலையான
அமைதியான மனதை பெற தனிமை
என்னும் நண்பனே என்றும் துணை
நிற்பான்,
- KaRthik
தனிமையை யாரும் கொடுக்காமல்
நாமாக ஏற்று கொள்கிறவரை
வரம் தான்,யாரோ ஒருவரால்
நாம் தனிமையில் தள்ளப்படும் போது
தான் அது சாபமாகிறது,
- Ben Kishore
இந்த தனிமை எனக்கொரு வரம்
முழுவதும் படம் சீரீஸ் பேஸ்புக்
அரசியல் கேலி என்று நேரம் போகிறது
புதிய பழக்கங்களாக புத்தகம் மற்றும்
கவிதை கதைகள் என்று எனக்கு பிடித்ததை
மட்டும் தேர்ந்தெடுத்து என் நேரம் போகிறது
அதனால் எனக்கு அது வரம்,
- Prabu Ram
தனிமை ஒரு சாபமா இல்ல வரமா
சொல்றது ஒவ்வொருத்தரோட
வாழ்வியல் பொறுத்து எப்படி
சொல்றதுனா லாக்டவுனுக்கு
முன்னரும் சரி லாக்டவுனுக்கு
பின்னரும் சரி சொந்தம் எல்லாம்
இருந்தும் பலருக்கு பேச நேரம் இல்லை
யாரும் இல்லாதவங்களுக்கு பேச யாரும்
இல்ல இப்படிதான் நாட்கள் நகருது,
- Krithika Kumaran
தனிமை எல்லாருக்கும் பிடிக்காது
குறிப்பா எனக்கு சில நேரங்கள்ல
வேணாம்ன்னு தோணும்,என்னை சுற்றி
நண்பர்கள் இருந்துகொண்டே இருக்க
வேண்டும்,நான் வீட்டில் ஒரே பிள்ளை
என்பதால் சிறு வயதில் இருந்தே ஒரு Lonely
Feel தான்,லாக்டவுன் ஸ்டார்ட் ஆனதில்
இருந்து சொல்லவே வேணாம்
நான்,அம்மா,அப்பா ஆளுக்கு கையில ஒரு
போன் யாருக்கும் யாரோடையும் Interaction
ன்றதே இல்லாம போச்சு,நண்பர்கள் கிட்ட
பேசுறது கம்மி ஆகி இப்போ நேரம்
இருக்கப்போ பேச கோர்வையா
வரமாட்டீங்குது,ஆனா இப்படி ஒரு வாய்ப்பு
இனிமே கிடைக்குமான்னும் தெரியல,
So i Hate Loneliness Personally,ஆனா கோவமா
இருக்கப்போ Leave Me Alone – ன்னு தான்
சொல்ல தோணும்,சில நேரங்களில் அந்த
தனிமை தவறான எண்ணங்களுக்கு
கொண்டு செல்கிறது,
- Vidyalaxmi Kaliyamoorthy
குரங்கிலிருந்து உடலளவில்
மனித வளர்ச்சி அடைந்த நம்மில்
பலர் இன்றும் மனதளவில் குரங்காகவே
வாழ்கிறோம்,இது போன்ற
மனிதக்குரங்குகளுக்கு தனிமை சாபமே,
- Mithran Thamodar
தனிமை வரமா சாபமான்னு தெரியல
நம்மலா அத எடுத்துக்கிட்டா அது வரம்
நமக்கு பிடிச்சவங்க அந்த தனிமைய நமக்கு
கொடுத்தா அது மிகப்பெரிய சாபம்,
- Dharshini Arasu
இது தவற சில நண்பர்கள் சொன்னது
ஒரே மாதிரியான ஒப்பிடுகளில்
பொருந்தியதுன்னு சொல்லலாம்
செல்லக்குட்டிகளா தனியா பெயர்
Mention பண்ணலன்னு தப்பா
நினைக்காதீங்க,நினைக்க மாட்டிங்கன்னு
நான் நிச்சயமா நம்புறேன்,
அதில் அவர்கள் சொன்னது
இந்த நேரத்தில் வேலை இழந்து
அல்லது வேலை இன்றி ஏற்படும்
பண பிரச்சனைகள்,இதற்கு முன்
நமக்கு இப்படி அடைந்து கிடப்பது
என்பது பரிட்சயம் இல்லாதது,யாரையும்
நேர்ல போய் சந்திக்காம முகம் கொடுத்து
பேசாம மன வேதனைகள் அதிகமாகி சில
நேரங்களில் தவறான யோசனைகள் கூட
மனசு நினைக்குதுன்னும்,அதோட உச்சம்
சிலருக்கு Sucide Thoughts முக்கியமா,
பந்தயத்துல ஓடுன குதிரைய திடீர்னு
ஓடாதன்னு சொன்ன கதை தான் இங்க
நடந்துருக்குன்னும்,தனிமை நமக்கு
வரமாக இருந்தாலும் குடும்பத்திற்கு
அது சாபம் எனவும்,தனிமை ஒரு வாழ்ந்து
பார்க்க வேண்டிய அழகான உணர்வு
என்றும்,தனிமை அமையுது அதை
ஏற்றுக்கொண்டு போகவேண்டும்
என்றும்,தனிமை ஒரு வரம்
என்றும்,தனிமை நமக்கு கிடைத்த
ஒரு Option எனவும்,தனிமையினால்
ஏற்பட்ட வேலை முடக்கம்,மனநிலை
உணர்வு சார்ந்தது எனவும்,தன்னிலை
படுத்தும் எனவும், இப்படி நண்பர்கள்
பலதரப்பட்ட கருத்துக்களை தனிமையை
பற்றி முன் வைத்தனர்,
இப்படி தனிமை ஒவ்வொருத்தங்க
வாழ்க்கையிலும் ஒவ்வொரு மாதிரியான
பங்கு வகிச்சுருக்கு சில அழகாகவும் பல
பயமாகவும் இருக்கிறது,
தனிமை – ன்னு வரப்போ உங்க
எல்லாரவிடவும் எனக்கு இந்த டாபிக்
ரொம்ப ஸ்பெஷல்ன்னு சொல்லலாம்,
ரொம்ப பெருசா போது Article – ன்னு
நினைக்கவேணாம்,நிச்சயமா தனிமை
பற்றிய என்னோட பிரதிபலிப்பு உங்க
எல்லாருக்கும் வித்தியாசமாகவும் அதே
நேரத்தில் மனதிற்கு நெருக்கமாகவும்
இருக்கும்,
*
பயணம்,காதல்,பிரிவு,வழி,வலி,
அழுகை,இழப்பு,நட்பு,துரோகம்,
கோபம்,சாந்தம்,சிரிப்பு,கொண்டாட்டம்,
ஆச்சரியம் இப்படி எல்லாமுமாய்
என் முன் நிற்பது நான் ரசிக்கும் தனிமையே,
யாருக்கும் சிறு தீங்கும்
நினைக்காதவன் நான்,
மனதளவிலும் காயப்படுத்தக்கூடாது
என நித்தமும் நினைப்பவன் நான்,
பணம் பெயர் புகழ் எதற்கும்
ஆசைப்படாத நிராயுதபாணி நான்,
அன்பையும் கருணையையும் மட்டுமே
பிறருக்கு தானம் செய்பவன் நான்,
புள்ளின் நுனியில் இருக்கும் நீர்த்துளிக்கு
கூட துரோகம் விளைவிக்காதவன் நான்,
இசையில் மூழ்கி பாடல்களின் வரிகளுக்கு
தன்னை பொருத்திப்பார்க்கும் ரசிகன் நான்,
தேன் மிட்டாய்கள் வாங்கி கொடுத்து
குழந்தைகளின் சிரிப்பை கவரும் கள்வன் நான்,
ஜோடியாய் சுற்றி திரியும் காதலர்களை
பார்த்து கள்ளங்கபடமில்லா சிரிப்பவன் நான்,
காண்கின்ற யாவையும் எழுத்துக்களாக
உருவம் கொடுக்கும் திறன் உள்ளவன் நான்,
ரோஜாவின் மொட்டுக்களை விட அதன்
முட்களின் மேல் காதல் கொள்பவன் நான்,
அப்பாவின் மிதிவண்டி பெடலை சுற்றி
பார்த்து காலத்தை கடந்து வந்தவன் நான்,
அம்மா குளிப்பாட்டும் சீகைக்காய்
குளியலை நினைத்து பார்ப்பவன் நான்,
உடன் இருந்து குழி பரித்த தோழனையும்
பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டவன் நான்,
வறுமையான காலத்தில் உணவளித்த
கல்லூரி நண்பனை போற்றுபவன் நான்,
புத்தக வாசிப்பை நேசிக்கும்
அருமையான தமிழ் வாசிப்பாளன் நான்,
பிறரை எழுதுங்கள் என சொல்லி
வலிக்கு வழி தேடி கொடுக்கும் பயணி நான்,
தனிமையை ரசிக்கும் இரவுகளின்
அழகை சொல்லும் தேவதூதன் நான்,
இவ்வளவு இருந்தும் செய்யாத பாவம்
ஏன் என்னை கழுகு போல் வட்டமிட்டு
சுற்ற வேண்டும்..?
அடுத்த நொடி நிச்சயம் இல்லாத
வாழ்க்கையில் நான் அடுத்த உயரத்திற்கு
முன்னேற முடியாமல் தடையாய் இருப்பது
செய்யாத பாவங்களும் மனதில் இருக்கும்
ஆறாத காயங்களுமே,
இன்று பிணம் போல் நடமாடுதல்
என்பது என் வாழ்க்கை படலத்தின்
வெறுமைக்கான கோரத்தாண்டவங்கள்,
ஓட்டம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது
என்னுடைய இந்த நிலை மாறு(ம்)(மா)(மோ),
காத்திருக்கிறேன் காலத்தின் பிடியில்
தன் வலிகளை மறைத்து உங்களில்
ஒருவனாக இந்த தனிமையின் பிடியில்,
தனிமையில வலி இருக்கும்
செல்லங்களா ஆனா,அதை விட
நம்ம ரசிக்குற தனிமைன்னு ஒன்னு
இருக்குல்ல அது தான் நான்
உங்களுக்கு சொல்லப்போறேன் இங்க,
என் இனிய தனிமையே..?
அம்மாவின் கருவில் பிறக்கும் போது
தனிமையில் ஆரம்பித்த பயணம் இது,
அதற்கு பிறகு மேலே சொன்னது
போல காதல்,பிரிவு,இழப்பு ன்னு
நம்ம பசங்களுக்கு தனிமை கூடவே
இருக்க ஒரு பந்தம் மாதிரி ஆகிடுது,
கொஞ்சம் இப்படி யோசிங்க,
நீங்க அதிகாலை வாக்கிங் போறீங்க
பனி சூழ்ந்த சாலையில் நீங்க மட்டும்
தனியா நடந்து போறப்போ
இந்த தனிமை தான் உங்க தோழன்,
மழைக்காலத்தின் மாலை வேளையில்
அப்படியே மழைல தனியா நனஞ்சுட்டே
சாலை ஓரம் இருக்க டீக்கடையில ராஜா
சார் சாங் கேட்டுட்டே டீ குடிக்குறப்போ
இந்த தனிமை தான் உங்க தோழன்,
ஜிம் போறவங்க மனச ஒரு நிலை படுத்தி யோகா செய்யுறவங்க உங்க வலிய மறக்க பண்ணுற இதெல்லாத்தையும் உங்க கூட இருந்து வழி நடத்துறது தனிமை – ன்ற உங்க தோழன் தான்,
ஒருத்தங்க உங்கள திட்டிட்டாலோ
சண்டை போட்டாலோ மனிதரோட
மொழி கேட்டு காயப்பட்ட உங்ககிட்ட
ஆறுதல் சொல்லுவது அமைதியின்
மூலம் தனிமை – ன்ற உங்க நண்பன் தான்,
உங்க வாழ்க்கையில நிறைய பேரு
வருவாங்க போவாங்க ஆனா கடைசி
வர உங்க கூட உண்மையா இருக்கது
தனிமை – ன்ற நண்பன் மட்டும் தான்
அதுக்காக உங்க நண்பனுக்கு
நீங்க நன்றி சொல்லியே ஆகணும்,
சில பிரிவுகள் ஏற்படப்போகுதுன்னு
முன்கூட்டியே தெரிஞ்சு அங்க போறப்போ
நம்ம கை பிடிச்சு கூட துணையா வரது
தனிமை – ன்ற நண்பன் தான்,
உங்க நண்பன் உங்ககிட்ட
கோச்சுப்பான் எப்போன்னு தெரியுமா..?
வலி மறக்க குடி,புகை ன்னு
வேற பாதை நீங்க தேர்ந்து
எடுக்குறப்போ,ஆனா அதெல்லாம்
வேணாம் நம்ம செஞ்சது தப்புன்னு
நீங்க உணர்ந்து மீண்டு வரப்போ
ஒரு அம்மாவா தன்னோட மடியில
வச்சு உங்கள பாதுக்காக்குறவன்
தான் தனிமை – ன்ற நண்பன்,
கனவென்றாலும் சரி
கண் திறக்கின்ற நேரமும் சரி
இவன் உங்களை சார்ந்து இருக்கும்
உங்கள் நிழல் தெரியா தோழன்,
பிரச்சனை வரும் போகும்
தனிமைய நீங்க உணருங்க
அதை ரசியுங்க உங்களுக்குள்ள
உங்க வாழ்க்கை அழகாக மாறும்,
இதுக்கு மேல என்ன சொல்ல
ஹ்ம்ம் போதும்ன்னு நினைக்குறேன்,
Life is So Beautiful
அதை எப்படி Handle பண்ணுறீங்கன்னு
உங்க உணர்தல் – ல தான் இருக்கு,
தனிமைய ரசிங்க
காலம் சற்று மாறும்
காட்சிகள் கைகூடும்,
இப்படிக்கு
தனிமை காதலனாக நான் !! 🤩❤️