இந்த ஐபிஎல் முடிந்த நிலையில், பல மறக்க முடியாத நிகழ்வுகள் இந்த வருடம் நிகழ்ந்தேறியது. அதில் முக்கியமாக சேலம் சின்னப்பம்பட்டி யை சேர்ந்த நடராஜன் சன்றைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக பந்து வீசினார். அவரின் பந்துவீச்சு உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரின் யார்க்கர் பந்துவீச்சு பல உலக அளவிலான பேட்ஸ்மேன்களை திணறடித்தது, இந்த தொடரில் அவர் 16 விக்கெட்டுகளையும் 60 க்கும் மேற்பட்ட யார்க்கர் பந்துகளையும் வீசினார். மேலும் யார்கர் பந்தை வீசுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும் அதை இந்த தொடர் முழுவதும் நடராஜன் வீசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அது வேறு இல்லாமல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் செல்லும் இந்திய அணியில் இடத்தையும் பெற்று தந்தது.
அந்த வகையில் முன்னாள் உலக கோப்பை இந்திய அணியின் தலைவரான கபில்தேவ் அவர்கள் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் நடராஜனை தனது ஹீரோ என்று பாராட்டு மழையில் நனைய வைத்துள்ளார்.
கபில்தேவ் அவர்கள் சமீபத்தில் நடந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் சம்மிட் சந்திப்பில் “நடராஜன் எனது ஹீரோ எனவும், இந்த ஐபிஎல்லில் இந்த இளம் பந்துவீச்சாளர் பயம் அறியாமல் பல பந்துகளை வீசியது அவரை வெகுவாக கவர்ந்து வந்ததாகவும், யார்க்கர் பந்து என்பது ஒரு தொடரின் முக்கியமான பந்துவீச்சு எனவும் இன்று மட்டும் இல்லாமல் கடந்த 100 வருடங்களில் சிறந்த பந்து யார்க்கர் பந்து என்றும் அவர் கூறினார்.
IND vs ENG: Dinesh Karthik to join Sky Sports commentary team