Coronavirus Editorial News

இந்தியாவில் கொரோனாவை தடுக்க முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல்

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து ஒன்றுக்கு மனித சோதனைக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது.

கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்க உலகம் முழுக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. இது தற்போது பெரிய போட்டியாகவே மாறியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தற்போது தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.

ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த மருந்து உலக அளவில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்கள்.

ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள இந்த மருத்துக்கு கோவாசின் (COVAXIN) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்பட்டு சோதனை செய்யப்பட்டு வரும் முதல் கொரோனா வைரஸ் சோதனை மருந்து ஆகும் இது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை பரத் பயோடெக் நிறுவனம் உடன் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த சில மாதங்களாக SARS-CoV-2ல் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வந்தது. மட்டுப்படுத்தப்பட்ட SARS-CoV-2 வைரஸில் இருந்து இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த தடுப்பு மருந்தில் தீவிரமான சோதனைகளை செய்து இருக்கிறார்கள். இதுவரை செய்யப்பட்ட சோதனைகள் நல்ல முடிவை கொடுத்துள்ளது .அந்த நிறுவனத்தில் இருக்கும் BSL-3 (Bio-Safety Level 3) சோதனை கூடத்தில் மிகுந்த பாதுகாப்பிற்கு இடையில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதனால் மனிதர்கள் மீது சோதனை நடத்த இந்த மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் இதன் சோதனைகள் தொடங்கும் என்கிறார்கள். இந்த கோவாசின் (COVAXIN)ஐ உருவாக்காகி இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் இதற்கு முன் போலியோ, ரேபிஸ், ஜாப்பனீஸ் என்சிபிலிட்டிஸ், சிக்கன்குன்யா, சிகா ஆகிய வைரஸ்களுக்கு மருந்து கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது .

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,591 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

First in TN: Vellore Siddha centre to hold clinical trials for COVID-19 treatment

Penbugs

Man kills his 7YO niece for ‘making too much noise’

Penbugs

Rajasthan: 5% reservation for MBC in Judicial Services

Penbugs

COVID19: 15YO Golfer Arjun Bhati sells all his 100+ trophies, raises Rs 4.30 Lakh

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

Penbugs

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து ; தமிழக அரசு

Penbugs

பதிவுத்துறை அலுவலகங்கள் 20ம் தேதி முதல் செயல்படும்: ஐஜி ஜோதி நிர்மலாசாமி அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. இ-பாஸ் முறை ரத்து- தமிழக அரசு

Penbugs

Padma Awardees | Complete List | 2020

Anjali Raga Jammy

TN: 2 districts color-code vehicle to limit traffic

Penbugs