இறந்த தன் மனைவியின் நினைவாக மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தத்ரூபமாக சிலை வடிவமைத்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் சேதுராமன்.
இவருடைய மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஆக. 8 ஆம் தேதி மரணம் அடைந்தார்.
தன் மனைவி மீது கொண்ட தீரா பாசத்தினால் சேதுராமன், அவரது உருவச் சிலையை வடிவமைக்க வேண்டும் என்று எண்ணினார்.
அதன்படி மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பி பிரசன்னா மற்றும் ஓவியர் மருதுவை அணுகி தனது எண்ணத்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பைபர் மெட்ரியல் மூலம் நவீன தொழில்நுட்பத்தில் 6 அடி உயரம் உடைய பிச்சைமணி அம்மாள் அமர்ந்த நிலையில் உள்ள சிலையை வடிவமைத்துள்ளனர்.
இந்த சிலை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது
