தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கடந்த 2 நாள்களில் 465 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக தீபாவளி அன்றும், அதற்கு முந்தைய நாளன்றும் மது விற்பனை களைகட்டும்.
இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் 13ம் தேதி 227 கோடியே 88 லட்சம் ரூபாய்க்கும், 14ம் தேதி 237 கோடியே 91 லட்சம் ரூபாய்க்கும் மது விற்றுள்ளது.
2 நாள்களில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் மட்டும் 103 கோடியே 82 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
சென்னை மண்டலத்தில் 94 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கும் மதுவிற்பனையாகியுள்ளது.

MS Dhoni was a special man in the run chase: Michael Holding