Cricket IPL Men Cricket

கலியுக தர்ம யுத்தம்!

கிரிக்கெட்ல பரபரப்பா மேட்ச் போனாலே
ஆர்வமா உட்கார்ந்து பார்க்குறப்போ அதுல
சில அணிகள் விளையாண்டா ஆர்வம்
மட்டுமில்லாமல் கொஞ்சம் வெறி ஏறும் நாடி
நரம்புகளில்,

உதாரணமாக ஆஷஸ் தொடரில்
இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிக்கு
எதிரான போட்டிகள் நடத்தும் போது
போட்டி நடைபெறும் ஊரில் திருவிழா
கோலம் பூண்டிருக்கும்,தங்களது நாட்டின்
பெருமை சார்ந்த விஷயமாக பின்னர்
பேசப்பட்டது,

பிறகு இந்தியா பாகிஸ்தான்
இந்த இரண்டு அணிகள் விளையாடும்
போது உலகமே கண் இமைக்காமல்
பார்க்கும்,பாகிஸ்தான் நமக்கு எதிரி
நாடு என்ற பிம்பம் இங்கே இருப்பதினால்,
ஆனால் குறிஞ்சி பூ போல் அந்த
அணியிலும் நட்புடன் பழகும் பல வீரர்கள்
அங்கே இருக்கிறார்கள்,வெள்ளிக்கிழமை
மேட்ச் நடந்தால் பாகிஸ்தான் தான் வெற்றி
பெறும் என்று கூட பல வருடங்களாக
சொல்லப்பட்டு வருகிறது,ஆரவாரத்திற்கு
எப்படி பஞ்சம் இல்லாமல் இருக்கிறதோ
அதே போல் மைதானத்திற்குள் இரு அணி
வீரர்களுக்கும் வாய் தகராறுகள் ஏற்பட்டு
ஆட்டம் சூடு பிடிக்கும்,

இப்படி சுவாரஸ்யம் நிறைய
நடக்கும் போது அதுக்கென ஒரு கூட்டம்
கூடுகிறது அப்படி கூடிய கூட்டம் தான்
இப்போது தொடங்கவிற்கும் ஐ.பி.எல்
போட்டிக்கு தயாராக இருக்கும் ரசிகர்
கூட்டம்,

இந்த 2020 – இல் நமக்கு பல
சோகங்கள் வந்து துன்புறுத்திய போது
பொழுதுபோக்க்காக இருக்கும்
திரையரங்கம்,சுற்றுலா என எல்லாம் தடை
செய்யப்பட்ட போது மனச்சோர்வு அதிகமாக
ஏற்பட்டு ஏதாவது ஒரு நிகழ்வு தங்களது
பொழுதுபோக்கை தீர்த்துக்கொள்ள
கிடைத்துவிடாதா என்று மக்கள் தவிப்பில்
இருக்கும் போது தான் ஐ.பி.எல் அறிக்கை
வந்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும்
சந்தோஷத்தை கொடுத்தது,

எப்படி சென்னை 28ல ராயபுரம்
ராக்கர்ஸ்க்கும் ஷார்க்ஸ்க்கும் ஆகாதோ
அப்படி தான் இங்க நம்ம ரெண்டு டீமும்,

ஒன்னு காட்ஃபாதர் சச்சின் இருந்த டீம்
அதனாலயோ என்னவோ சச்சின் – டீம்
தோற்க்கக்கூடாதுன்னு ஆரம்பிச்சு
இன்னக்கி வர அந்த டீம்க்கு விசுவாசமா
இருக்க மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்
ஒரு பக்கம்,

தோனி தலைமையில ஆரம்பத்துல
இருந்து வழிநடத்துற டீம்,2019
உலகக்கோப்பைக்கு பிறகு சமீபத்துல
தோனி தன்னுடைய ஓய்வை அறிவித்த
நாளுக்கு பிறகு ஏறக்குறைய ஒரு
வருடத்திற்கு மேல் மீண்டும்
விளையாடப்போகும் முதல் போட்டி
என்பதால் தங்கள் தலைவனின்
ஆட்டத்தை காண அந்த அணி ரசிகர்கள்
தவம் கிடக்கின்றனர் இன்னொரு பக்கம்,

இது போக Head to Head Leading,
Rivalry Matches,Fairplay – ன்னு நிறைய
விஷயங்கள் இரண்டு அணிக்கும்
சூடேத்தி விடுற மாதிரி இங்க புள்ளி
விவரத்துல பசங்க அப்டேட்ஆ இருக்காங்க,

ஒரு காடு பத்தி எரியுறப்போ
கூட கொஞ்சம் நெருப்ப மூட்டி விட்ட
கதையா இந்த ரெண்டு அணியும்
விளையாடுறது ஏதோ இரண்டு நாட்டு
ராணுவத்துக்குள்ள நடக்குற
உச்சகட்ட போர் மாதிரி சித்தரிக்கப்படுகிறது,

கடந்த ஒரு வாரத்தில் வீடியோ எடிட்கள்
சரமாரியாக இறங்குகிறது அனைத்து
அணியின் ரசிகர்களிடம் இருந்தும்,

இவர்கள் இரண்டு அணிகளும்
மீதமிருக்கும் ஆறு அணிகளும் சம
பலத்துடன் களம் இறங்கப்போகிறது,

சமூக வலைத்தளத்தில்
ஒரு பனிப்போருக்கு ரசிகர்கள்
தயாராகவே இருக்கிறார்கள் அதுவும்
முதல் போட்டியே சிறப்பான தரமான
சம்பவமா இருக்கமாதிரி இருக்கு,

இந்த லாக்டவுன் நேரத்துல
எல்லோருமே பலதரப்பட்ட விஷயங்கள்ல
கொஞ்சம் மனசு சரி இல்லாம தான்
இருப்பிங்க,சில பேருக்கு சரியான வேலை
இல்லாதது,பலருக்கு பண புழக்கத்தில்
பிரச்சனை,கை கூடி வர இருந்த நிகழ்வுகள்
தடை பட்டு போனது என இப்படி பல பல
இருக்கிறது,மனரீதியாகவும் சிலர் மிகவும்
பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் ஏதோ ஒரு
சூழலில் மாட்டிக்கொண்டு,

ஒரு நல்ல பொழுதுபோக்கு நமக்கு
இப்போது கிடைக்கப்போகிறது,
உங்கள் கவலைகளை மறந்து
சாயங்கால நேரத்துல அப்படியே
மேட்ச் பாக்க உட்காருங்க,நண்பர்கள் கூட
விவாதம் செய்யுங்க ஆனா சண்டையாக
மாறாத பட்சத்துல நல்லது,

எது எப்படியோ ரெண்டு மாசம்
பொழுதுபோக்குக்கு பஞ்சம் இல்லாம
நமக்கெல்லாம் தீணி போடுற மாதிரி இந்த
கஷ்டமான நேரத்துல ஐ.பி.எல் நடக்கபோது,

எல்லாரும் பண்டிகைய
கொண்டாடுங்கல – ன்ற மாதிரி
உங்கசோகம்,வெறுப்பு,மனச்சோர்வு
இதெல்லாம் இல்லாம ஜஸ்ட் இந்த ரெண்டு
மாசத்த ஐ.பி.எல் கூட என்ஜாய் பண்ணுங்க,

Time to Meet – Dream 11 IPL 2020 !! 🔥🤩❤️

Image: Twitter!

Related posts

Men’s Ashes 2019: When the match was played without bails

Penbugs

Love we get in Chennai is more than what we get in our hometown: Deepak Chahar

Penbugs

ENG v WI, 5th T20I- England win the 5-over match

Penbugs

What we had in Lucknow cannot be dubbed as a camp: Indian coach WV Raman about IND vs SA series

Penbugs

Tom Moody appointed as Sunrisers Hyderabad’s director of cricket

Penbugs

BBS vs DSS, Match 31, ECS T10 Germany-Krefeld 2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Syed Mushtaq Ali T20 Trophy | GOA vs SAU | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

BJ Watling to retire from cricket after England tour

Penbugs

MSD is an asset to any team he plays for: Brian Lara

Penbugs

Had an interesting chat with Ponting on phone: Ashwin

Penbugs

Indian superstars- Shubhangi Kulkarni

Penbugs

Delhi Capitals appoint Sourav Ganguly as advisor

Penbugs

Leave a Comment