Editorial News

மதுக்கடைகள் இருக்கும் இடங்களில் மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் : கமல்ஹாசன்

டாஸ்மாக் கடைகள் இருக்குமிடங்களில் மறுவாழ்வு மையங்கள் உடனே அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“பட்டப்பகலில் குடித்துவிட்டு பொது இடங்களில் தகராறில் ஈடுபட்ட ஒரு குடிநோயாளியால் கடமை தவறாத காவல் உதவி ஆய்வாளர் பாலு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடிநோயாளியினால் குடும்பத்தில் ஏற்படும் துன்பம் தாங்காமல் அவரது மனைவியும் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.
குடிமைப்பணி அதிகாரிகளை பொறுப்பில் அமர்த்தி ஆயிரக்கணக்கான கடைகளைத் திறந்து லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை பட்டப்பகலிலேயே குடிக்கும் குடிநோயாளிகளாக மாற்றி இருக்கிறது இந்த அரசு.

சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல. அது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விற்பனை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டிய ஒன்று.

குடியிலிருந்து மீள நினைக்கும் குடி நோயாளிகளுக்கு தரமான இலவச மறுவாழ்வு மையங்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட வேண்டும். எங்கெல்லாம் மதுக்கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி

Penbugs

1st look of Nithya Menen in Gamanam

Penbugs

Well done Rafa, you deserve it: Roger Federer

Penbugs

இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

Penbugs

World’s oldest Panda in captivity dies at age 38

Penbugs

Pakistan Police blames woman for gang rape, faces backlash

Penbugs

அதிமுக கூட்டணியில் பா.ஜ, பாமக போட்டியிடும் தொகுதிகள் வெளியானது

Penbugs

New Biriyani shop owner booked after his inaugural offer led to crowding

Penbugs

பாமக முதற்கட்டமாக 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

கோயம்புத்தூர் சாந்தி சோசியல் சர்வீஸ்’ சுப்பிரமணியம் காலமானார்

Penbugs

Vidyu Raman gets engaged to Sanjay Watwani

Penbugs

Bigg Boss Tamil 4, Day 42, Written Updates

Lakshmi Muthiah

Leave a Comment