மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதி துர்கா தற்கொலை செய்து கொண்டார். நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் மாணவியின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜோதி துர்கா(19) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோதி துர்காவின் உடலை மீட்ட காவலர்கள், தேர்வு அச்சத்தால்தான் மாணவி உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் வி.விக்னேஷ், மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த புதன்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
