Penbugs
Editorial News

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்

மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனத் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்.

அவருக்கு வயது 74. அண்மையில், தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனையொன்றில், ராம் விலாஸ் பாஸ்வானுக்கு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு ராம்விலாஸ் பாஸ்வான் காலமானதாக, அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிராக் பாஸ்வான், டுவிட்டரில் அறிவித்தார்.

50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்குச் சொந்தகாரரான ராம்விலாஸ் பாஸ்வான், தாழ்த்தப்பட்ட, மற்றும் பழங்குடியின மக்களுக்காகவே இறுதிவரை போராடியவர்.

கடந்த 2000மாவது ஆண்டில், லோக் ஜனசக்தி என்ற பெயரில், தனிக்கட்சி கண்டார்.

10 முறை எம்.பி.யாக தெரிவான ராம்விலாஸ் பஸ்வான், 2014ஆம் ஆண்டு முதல், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசில், மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

Leave a Comment