Penbugs
Cinema

மணிரத்னத்தின் பிரம்மாண்டமான ஆந்தாலஜி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா நிலைமை சரியானவுடன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்காக புதிதாக ஆந்தாலஜி ஒன்றை மணிரத்னம் தயாரிக்கவுள்ளார். ‘நவரசா’ என்ற பெயரில் உருவாகும் இந்த வெப் சீரிஸ் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

இந்த 9 கதைகளையும் ஒன்றிணைத்து ஆந்தாலஜி ஆக எடுக்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.கே.வி.ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன் , சித்தார்த், அரவிந்த்சாமி, பிஜாய் நம்பியார், பொன்ராம், ஹலிதா ஷமீம் , கார்த்திக் நரேன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர்தான் இந்த 9 கதைகளை இயக்கவுள்ளனர். இதன் மூலம் அரவிந்த்சாமி மற்றும் சித்தார்த் இருவருமே இயக்குநர்களாக அறிமுகமாகவுள்ளனர்.

இதில் அனைத்து இயக்குநர்களுமே அவர்களுக்கான கதைகளுக்கு நடிகர்களைத் தேர்வு செய்து வருகிறார்கள். இதில் சூர்யா, விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ் , அரவிந்த் சாமி , சித்தார்த் , பிரசன்னா , அழகம்பெருமாள் , சிம்ஹா , விக்ராந்த் , கௌதம் கார்த்திக் ,அசோக் செல்வன் , ரோபோ சங்கர், ரமேஷ் திலக் நடிப்பது உறுதியாகியுள்ளது.

தமிழ் சினிமா ஓடிடியில் அந்த அளவிற்கு பிரபலம் ஆகாமல் இருந்த நிலையில் தற்போது இந்த நவரச ஆந்தாலஜி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .

Related posts

Avasesh – An isolation expanded

Aravindakshan

Gunjan Saxena: The Kargil Girl Netflix [2020]: It’s rich in resilience and free from apprehension

Lakshmi Muthiah

Happy Birthday, Trisha!

Penbugs

Shouldn’t torture us to commit suicide for TRP: Oviyaa on Bigg Boss

Penbugs

A R Rahman’s word about #MeToo

Penbugs

96 Medley is out now!

Penbugs

Cobra’s 1st single, Thumbi Thullal to release on 29th June

Penbugs

The Classic Audrey Hepburn!

Penbugs

கொரோனாவால் பாதித்து, குணமடைந்த நடிகர் சூர்யா

Penbugs

என்றும் எங்கள் குஷ்பு..!

Penbugs

அன்பான சூர்யாவுக்கு !!

Shiva Chelliah

Leave a Comment