தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனையாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் டாஸ்மாக் கடைகளில் சனிக்கிழமையன்றே மதுவகைகளை குடிமகன்கள் வாங்கி செல்கின்றனர்.
எனவே சனிக்கிழமைதோறும் மதுவகைகளின் விற்பனை களைகட்டி வருகிறது. இதன்படி நேற்று ஒரே நாளில் 250 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக மதுரையில் 52 கோடியே 45 லட்ச ரூபாய்க்கு மதுவிற்பனையாகியுள்ளது.
இதற்கடுத்து திருச்சியில் 51 கோடியே 27 லட்சம் ரூபாய்க்கும், சென்னையில் 50 கோடியே 65 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது.

Pakistan tour of New Zealand | 2nd T20I | NZ vs PAK | Dream 11 Prediction | Fantasy Cricket Tips