Penbugs
CricketIPLMen CricketWorld Cup 2019

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக்!

பாம்பை கண்டால் படையும் நடுங்கும்
என்பார்கள், பல நேரம் நாம் பாம்பை
அடித்து விரட்டினாலும் சில நேரம் அது
நமக்கு பயத்தை காட்டிவிடும்,அந்த ஒரு
நிமிட பயம் உசுருக்கு சமமானது,

திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில்நாதன் அரசாங்கம் – ன்னு
பாட்டு பின்புறம் ஒலிக்க
சூரசம்ஹாரத்தில் சூரனை வதம் செய்த
முருகன் மக்கள் வெள்ளத்தில் அரோகரா
முழக்கத்துடன் பக்தர்களுக்கு
காட்சியளிப்பார்,

இதே காட்சி தான் இங்கும்,

1985 – இல் அன்று ஒரு சிறுவன்
திருச்செந்தூர் கடற்கரையில்
உப்புக்கு பெயர் போன தூத்துக்குடி
உப்புக்காற்றில் பிறந்தான்,

யாருக்கு தெரியும் 2018 – 18 மார்ச்
அன்று அவன் சூரர் படையை
வதம் செய்வான் என்று..?

2004- இல் இந்திய கிரிக்கெட் அணிக்குள்
நுழைந்தாலும் இன்று வரை வாய்ப்புகள்
கம்மியே,

சில நேரம் கிடைத்த வாய்ப்பிலும்
பெரிதாக ஜொலிக்க நேரம் சரி வர
அமையவில்லை என்றே சொல்லலாம்,

2018 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அணிக்கு கேப்டன் பொறுப்பை ஐபிஎல்
தொடரில் கையில் எடுத்து பல
வெற்றிகளையும் பதிவு செய்தார்,

ஐபிஎல் T20 – யில்
2018 – 147.77, 2019 – 146.24 என
நல்ல ஸ்ட்ரைக் ரேட்டுடன் தான்
ஒரு சிறந்த T – 20 பிளேயர் என
சொல்லி அடித்தார்,

பிறந்தது தமிழ் மண் என்றாலும்
சிஎஸ்கே அணிக்காக ஒரு முறையாவது
செலக்ட் ஆகி விளையாட வேண்டும்
என்பது தன் கனவு என்று கூட சமீபத்தில்
பேட்டி ஒன்றை அளித்திருந்தார், அதுவும்
ஷாருக்கான் போன்ற பெரும் தலையின்
கீழிருக்கும் அணியின் கேப்டனாக
இருந்து கொண்டு இப்படி
சொல்வதெல்லாம் கொஞ்சம் துணிச்சல்
தான்,

ஊரே ராசியில்லை என ஒதுக்கி வைத்த
ஒருவன் திடீரென்று அந்த ஊருக்கு ஒரு
பிரச்சனை என்றவுடன் முன் நின்று
சண்டையிட்டு களத்தில் வெற்றி
காண்பது சாதாரண விஷயமல்ல,

18 மார்ச் – 2018 நிடஹாஸ் ட்ராபி
இலங்கையில் நடக்கிறது, இறுதி
போட்டியில் நாகினி என கூறப்படும்
பங்களாதேஷ் அணியினர் பக்கம் வெற்றி
ஆல்மோஸ்ட் சென்றடைந்துவிட்டது,

12 பந்துகளில் 34 ரன்கள்
தேவை,இப்போதைய T20 – யில் இது
அடித்து ஆடினால் வெற்றி என்ற ஸ்கோர்
தான், ஆனால் பிரஷர் ஹாண்ட்லிங்
எக்ஸ்பிரியன்ஸ் இல்லாத விஜய் ஷங்கர்
மற்றும் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே
அடுத்து பேட்ஸ்மேன்கள், 7 – ஆவது
பேட்ஸ்மேனாக களத்தில் வந்து வெறும்
8 பந்துகளில் 29 ரன்கள் அதுவும் கடைசி
பந்தில் 5 ரன்கள் தேவை என
இருக்கும்போது சிக்ஸர் அடித்து வெற்றி
தேடி தந்தான் அந்த திருச்செந்தூரில்
பிறந்த ஒருவன்,

சூரனை வதம் செய்த
அதே காட்சி தான் இங்கும்,
முருகன் காலில் இருக்கும்
பாம்பை போல பாம்பு (நாகினி) நடனம்
ஆடும் ஒரு சூரர் படையயையே அவன்
வதம் செய்தவுடன் அங்கு முருகனுக்கு
திருச்செந்தூரின் கடலோரத்தில் மக்கள்
வெள்ளம் ஆர்ப்பரித்தது போல் இங்கு
ராவண தேசமான இலங்கையில்
நம்முடன் ராவண கூட்டமும் சேர்ந்து நமது
வெற்றியை கொண்டாடி வதம் செய்த
தினேஷ் கார்த்திக் எனும் ஐட்டங்காரனை
ஊரே சேர்ந்து ஆர்ப்பரித்து கொண்டாடிய
தருணம் அங்கே நடந்தது,

நாம வாழணும் செமையா
வாழ்ந்தான்டாற மாதிரி வாழணும் –
ன்னு தினேஷ் கார்த்திக் சம்பவம்
செஞ்சுட்டு போனதெல்லாம் தரமா
நின்னு பேசும் காலத்துக்கும்,

இன்னும் பல சம்பவங்கள் இந்திய
அணியிலும் ஐபிஎல் – லிலும் தினேஷ்
கார்த்திக் செய்வார் என்ற நம்பிக்கையில்
அவர் பிறந்தநாளை என்
எழுத்துக்களுடன் கொண்டாடுங்கள்,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

Related posts

Dinesh Karthik responds to Vaiyapuri’s new photoshoot

Penbugs