Cinema Inspiring

ராகதேவனுடன் ஓர் அகவை தின பயணம்!

என் தலையணை கண்ணீரில் நனைந்தால் ராக தேவன் அங்கு தன் ராகத்தை மீட்டுகிறான் என்று நான் இறந்த பின் என் கல்லறையில் எழுதுங்கள் என்றான் அந்த இசை மொழியின் ரசிகன்,

ஒரு சின்ன கற்பனை,ஆனா இது உங்களுக்கு மட்டுமே கற்பனை இன்னொருவருக்கு தினம் தினம் அவர் வாழ்வில் சந்தித்த ஓர் வாழ்வியல்,

தனிமைல எவளோ சுகம் இருக்கமுடியும்ன்னு நீங்க நினைக்கிறீங்க..? ஆனா அந்த சுகம் எத்தனை சோகங்களுக்கு மருந்தா இருக்கும்ன்னு உங்களுக்கு தெரியுமா..?

ஒரு இருள் சூழ்ந்த அறைக்குள்ள
கதவ பூட்டிட்டு கையில ஒரு ஃபோன் மட்டும் வச்சுட்டு அவன் படுத்துக்கிடந்தான்,

மனதுக்குள் பல சிந்தனைகள் அவனுக்கு
பத்து வயதில் இறந்த அப்பா
பன்னிரெண்டு வயதில் இறந்த அம்மா
பதி நான்கு வயதில் இறந்த தாத்தா
எட்டு வருட காதலின் பிரிவு
என தொட்டவை எல்லாம் துலங்காத நாட்கள் தான் அவன் வாழ்வில்,

இப்படி பல சிந்தனைகளை உள்ளடக்கிய அவன் எப்போதும் பிறரிடம் இருந்து தன்னை சற்று ஒதுக்கியே தன் நிழல் கூட மறைத்தே வாழ்ந்து வந்தான்,

கண்ணை மூடினால் தூக்கம் வராத இரவு அது அந்த நான்கு பக்கமும் இருள் சூழ்ந்த அறையில், ஒரு மஞ்சள் நிற குட்டி குண்டு பல்பு மட்டுமே அவனுடைய இரவுக்கான ஒளி,

அம்மா – அம்மா ஞாபகம் வருகிறதென்றால் அவன் கேட்கும் முதல் பாடல் பாலு மஹேந்திரா இயக்கிய நீங்கள் கேட்டவை படத்தில் எஸ்.ஜானகி அம்மா பாடிய “பிள்ளை நிலா” பாடல் தான்,பாடல் முழுதும் ராஜாவின் இசை தன் அம்மா மடியில் படுத்து ஆராரோ தாலாட்டு பாடி அவனை தூங்க வைப்பது போன்ற ஒரு பிம்பத்தை ராஜா தன் இசை மூலம் அம்மாவுடன் நெருக்கமாக இருக்கும் உறவை ஒரு மகனுக்கு அங்கே கொடுத்திருப்பார்,

அப்பா – அப்பா ஞாபகம் வந்தால் அழுகையும் சேர்ந்து வந்து விடும் ஏனென்றால் அங்கு ராஜா அவர்களின் பாடலுக்கு சக்தி அதிகம், சின்ன வயதிலேயே அவன் தன் அப்பாவை இழந்ததால் இந்த சமுதாயத்தின் பார்வை அவன் மீது எப்படி விழுந்தது, அதில் அவன் அடைந்த வலிகள் என எல்லாவற்றையும் பிரதிபலிக்கும் விதமாக நாயகன் படத்தின் தென்பாண்டி சீமையிலே பாடலை அங்கே ராஜா சார் பாடுகிறார்,
அப்பாவின் நினைவு ஏலேலோ ராகம் வழியே,

தாத்தா – எல்லாரோட வீட்டுலையும் தாத்தான்னா பேரபசங்களுக்கு உயிர் – ன்னு சொல்லலாம், அம்மா அப்பா ட்ட கூட சில விஷயம் சொல்லமாட்டோம் ஆன பல சீக்ரட்ஸ் தாத்தா காதுல தான் சொல்லி வைப்போம், அப்படி தான் அவனோட தாத்தா தான் அவனோட கிளோஸ் & பெஸ்ட் ஃப்ரண்ட் எல்லாம்,
அவரோட இழப்பு இவன ரொம்ப பாதிச்சிருச்சு, அவர் நினைவு வரும்போதெல்லாம் பாலு மஹேந்திராவின் “வீடு” படத்துல சொக்கலிங்க பாகவதர் அந்த கட்டுமான பணி நடக்கும் வீட்டுக்குள்ள போறப்போ வர அந்த அழகான பின்னணி இசை தான் இவனுக்கான மருந்து, அந்த காட்சி போலவே தன்னோட வீட்டுக்குள்ள தாத்தா சுத்தி சுத்தி வந்ததெல்லாம் அவன் கண்ணு முன்னாடி வந்து போகும் ராஜாவோட இசையின் மாய சூழ்ச்சியால்,

படிக்க: https://penbugs.com/annakkili-vandhu-44-aandugal/

காதல் – யாருக்கு தான் காதல் பிடிக்காது அது தரும் அளவில்லா சந்தோஷம் தான் எத்தனை, ஆனால் அதே நேரத்தில் காதல் தரும் வலி வார்த்தைகளில் விவரிக்க முடியாத துயரங்களையும் சில நேரங்களில் தருகிறது, காதல் தோல்விக்கு சிலர் மதுவை நாடுகின்றனர், இவனோ ராஜாவின் இசையை நோக்கி தன் வலி மிகுந்த தேடலை தொடர்ந்தான், கதிர் இயக்கத்தில் வெளிவந்த ” இதயம் ” படத்தில் பூங்கோடி தான் பூத்ததம்மா மற்றும் இதயமே பாடலும், பாலு மகேந்திரா இயக்கிய ” மூன்றாம் பிறை ” படத்தின் கண்ணே கலைமானே மற்றும் பூங்காற்று புதிதானது பாடலும் தான் அவன் தீரா வலி கொண்ட இரவுகளில் அவன் மனதில் பொசுங்கும் நெருப்பை அணைக்கும் மூடுபனி, இங்கும் ராஜா தான் அவனின் வலி நிவாரணி,

அவன் கடந்து வந்த பாதையில் வலிகள் அதிகம் தான் ஆனாலும் தினம் தினம் இரவில் ராஜா தன் இசையால் அவனுக்கு தனிமையை சுகமாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்,

இரவுகள் எப்பவுமே ரொம்ப அழகானது,
ஏன்னா அப்போ தான் மனசு கிடந்து தவிக்கும், அந்த தவிப்புக்கு ராஜா சாரோட இசை கூட இருந்தா அது சொர்க்கத்தில் மோட்சம் அடைந்த ஓர் அளவில்லா சுகம்,

இப்படி ஒருவரின் வாழ்வில் நிகழும் அன்றாட வழக்கத்தில் பிரிவு,வலி,இழப்பு, காதல், நட்பு,குடும்பம் என எல்லோரின் வீட்டிலும் ரேஷன் கார்டில் பெயர் இல்லாத ஓர் சொந்தமாக தான் இளையராஜா நம்முடன் தினம் தினம் பயணம் செய்கிறார்,

இப்படி எத்தனையோ பாடல்கள அவர் கொடுத்துட்டார் தலைமுறை தலைமுறையா நம்ம கொண்டாடுறதுக்கு,
உங்களுக்கு நேரம் இருந்தா “நான் கடவுள் படத்தோட பின்னணி இசைய தனியா ஒரு இரவு நேரம் கேட்டு பாருங்க,
நீங்கள் சிவ பக்தர் என்றால் அடித்து சொல்கிறேன் உங்களை அறியாமல் உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும் அந்த சிலிர்ப்பு தான் ராஜா சாரோட ஸ்பெஷல், எப்பவுமே நமக்கு ஒரு சிலிர்ப்ப கொடுத்துட்டே இருப்பார்,

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடலெல்லாம் பெரிதாக நாம் கொண்டாடப்படவில்லை என்ற வருத்தம் இன்று வரை எனக்கு இருக்கிறது,

பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும்
துரத்துதே – உன்
அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே

அருள் விழியால் நோக்குவாய்
மலர்ப்பதத்தால் தாங்குவாய் – உன்
திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற,

இந்த வரிகள் கூட இளையராஜா எழுதினது தான், சில சமயம் இசை மட்டுமில்லாமல் பாடல் வரிகள் மூலமும் ராஜா தன் மாயாஜாலத்தை நிகழ்த்திக்கொண்டு தான் இருக்கிறார்,

இரவுகள கொண்டாடுங்க
இளையராஜாவின் இசையோட,

||

என் வலிகளின் நிவாரணி நீ
உன் இசையால் மயில் தோகை
போல் வருடினாய் என் மனதில்
நீயே சுகம் தந்தாய் எந்தன் இரவிலும்,

||

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் ❤️

Related posts

சில்லுக்கருப்பட்டி பட இயக்குநரின் ‘ஏலே’ பட டிரைலர் வெளியானது

Penbugs

BJP lodges complaint over Oviya for a tweet

Penbugs

Go well, Irrfan!

Penbugs

Petta: Got Rajinified

Penbugs

‘Frozen II’ actress Rachel Matthews tests positive for coronavirus

Penbugs

Netflix series My Secret Terrius ‘predicted’ coronavirus pandemic

Penbugs

Maya Maya from Sarvam Thaala Mayam

Penbugs

First look of Pink Telugu remake, Vakeel Saab is here!

Penbugs

Uttrakhand Glacier Burst: Rishabh Pant to donate his match fee

Penbugs

Recent- Contenders of Oscars!

Penbugs

Chennai to California | Rise of Sundar Pichai

Penbugs