Penbugs
CricketMen Cricket

ரிக்கி பாண்டிங் – தன்னிகரற்ற தலைவன்

கிரிக்கெட் எப்போதும் தனி ஒருத்தருக்கான விளையாட்டு இல்லை. ஆடும் பதினோரு பேர் மனநிலையும் வெற்றி என்ற இலக்குடன் பயணிச்சா மட்டும்தான் நிறைய வெற்றிகள் தொடர்ந்து பெற முடியும் ‌.

அப்படி தொடர் வெற்றி பெற கேப்டனின் பங்கு ரொம்ப அளப்பரியது. கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு

” முன் ஏறு ஒழுங்கா உழுதா பின் ஏறும் சரியா உழுகும் “

அதுதான் கிரிக்கெட்டுக்கு அடிப்படை.ஒரு அணியின் கேப்டன் சரியா இருந்தா அந்த அணியும் சரியா இருக்கும்.

கிரிக்கெட் விளையாட்டில் அதிகபட்ச சாதனையாக இருப்பது உலககோப்பை ஜெயிக்கறது, அதை ஒரு முறை பண்ணாலே அது பெரிய விஷயம் ‌.
ஆனால் ஒரு மனுசன் அதை தொடர்ந்து இரண்டு முறை பண்ணி இருக்கார் என்பதை நினைச்சி பார்த்தாலே மலைப்பா இருக்கும் அந்த மனுசன்தான் ரிக்கி பாண்டிங்…!

ஓய்வுபெறும் வரை தன்னோட பேட்டிங் பார்மையும் தக்க வைச்சிட்டு , அணியையும் மிகச் சரியா வழிநடத்திட்டு போனதுலாம் அவரின் மாஸ்டர் மைண்ட் தான்‌.

இந்த மாடர்ன் டே கிரிக்கெட்ல எத்தனை பேர் வேணா புல் ஷாட் ஆடலாம் ஆனா முதன்முதலில் புல் ஷாட்டுனு ஒன்னை ரசிக்க வைச்ச ஆளு ,பவுன்சர் வந்தாலே அதிலிருந்து தப்பிச்சா போதும்னு இல்லாம அதை கரெக்டான டைமிங்லா கனெக்ட் பண்ணி அடிப்பார் பார்க்கவே அவ்ளோ அழகா இருக்கும்‌.

ரிக்கி பாண்டிங் கிட்ட நான் ரொம்ப வியந்த விஷயம் அவர் பிளேயரா தொடங்கின அப்ப இருந்த பிளேயர்ஸ் பலரும் அவர் கூடவே சரிசமமாக லெஜண்டா மாறி இருந்தாலும் தன்னுடைய கேப்டன்ஷிப்ல அவர் எந்த மாற்றத்தையும் பண்ணிக்கவே இல்லை அவரின் குறிக்கோள் அணியின் வெற்றியை மட்டுமே குறி வைத்து இருந்தது.

முரட்டுத்தனமா கேப்டன்சிப் , டெஸ்ட் மேட்ச்ல பார்வேர்டுல ஹெல்மெட் கூட போடாம நிற்கிறது , அவரின் பீல்டிங்னு ஒவ்வொரு விஷயத்திலும் அட சொல்ல வைச்ச ஆளுனா அது பாண்டிங்தான்‌.

சமீபத்திய பயிற்சியாளர் பாண்டிங் மேல் இன்னும் ஈர்ப்பு அதிகம் ஆகி இருக்கு. ஐபிஎல்லில் இளம் வீரர்கள் கொண்ட அணியா இருக்கும் டெல்லியை அவர் வழி நடத்தி செல்லும் விதம் , கோபக்கார பாண்டிங்கை அதிகம் பார்த்து இப்ப கொஞ்சம் அமைதியான பாண்டிங்கை பார்க்க நன்றாக உள்ளது.

சமீபத்திய அடிலெய்டு போட்டியில் பிரித்வி ஷாவின் புட் வொர்க் தவறை பாண்டிங் சொன்ன‌ கணிப்பு வைரலாக பரவியது , சிலர் ஆச்சர்யமாகவும் அதனை பேசினர் ஆனால் என்னை பொறுத்தவரை அவர் அவ்வாறு இல்லையென்றால்தான் ஆச்சரியம் ‌.

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் , சிறந்த பீல்டர் & உலகின் தலைச்சிறந்த கேப்டனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் …!

Related posts

போட்டியைக் கணிப்பதில் பாண்டிங்கை விட தோனி வல்லவர்” – மைக்கல் ஹஸி கருத்து !

Penbugs

WATCH: Sachin Tendulkar bats in Australia for Charity

Penbugs

Ponting reveals Smith’s batting position in IPL 2021

Penbugs

Ponting promises to have ”hard conversation” with Ashwin about Mankad

Penbugs

Mankading: R Ashwin reveals his conversation with Ricky Ponting

Penbugs

Lowest point as captain: Ricky Ponting on Monkeygate controversy

Penbugs

It’s a well-deserved opportunity: Coach Ponting about Pant’s new role

Penbugs

Had an interesting chat with Ponting on phone: Ashwin

Penbugs

Leave a Comment