Penbugs
CricketIPLMen Cricket

சாம்சன் – தி கில்லர்

Inconsistency Player லிஸ்ட்டில் எனக்கு தெரிந்து சஞ்சு சாம்சன் பெயர் அடிபடாத நாள் இல்லை என்று தான் சொல்லுவேன்,ஐ.பி.எல் ல ஆரம்பிச்சு இந்திய அணில விளையாண்ட வரைக்கும் இவர் மேல இருக்க பெரிய விமர்சனம் இது தான்,ஒரு பெரிய ஷாட் ஆடிட்டு அவுட் ஆகிடுவாருன்னு பேச்சு மேல பேச்சு,

ஆனா இதுக்கு எல்லாம் இந்த வருஷம் முற்றுப்புள்ளி வைக்கணும்,அடுத்து இந்தியால நடக்கப்போற T20 உலகக்கோப்பைக்கு சஞ்சு மாதிரி ஒரு பெரிய ஹிட்டர் நம்ம அணிக்கு வேணும்,அதுக்கு வசதியா இந்த வருஷம் ராஜஸ்தான் அணியோட தலைமை பொறுப்பு அதாவது கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்,இதில் இலங்கை அணியின் பெருஞ்சுவர் சங்ககாரா அவர்களும் ராஜஸ்தான் அணியில் பயிற்சியாளராக இணைந்துள்ளது யாருக்கு பலமோ இல்லையோ என்னை பொறுத்தவரையில் சஞ்சுவின் பலம்,தன் மீது இருக்கும் Inconsistency குற்றச்சாட்டை சங்காவிடம் சில நுணுக்கங்களை கேட்டு சரி செய்து கொள்ளும் அற்புத வாய்ப்பு இது.

சஞ்சுவிற்கு இது கேப்டனாக முதல் போட்டி வேற,பௌலர்ஸ் ரொட்டேஷனில் கொஞ்சம் சஞ்சு கேப்டன்சியில் சொதப்பினாலும் ஒரு அணி தலைவன் தன் அணியை எவ்வாறு சேஸிங்கில் கொண்டு செல்ல வேண்டும் என்று கேப்டனாக வந்த முதல் போட்டியில் தனது செஞ்சுரியுடன் ஒரு பெரிய பிக் ஹிட்டர் இன்னிங்ஸ் ஆடிக்கொடுத்து தன் அணியை வெற்றிக்கு அருகில் வரை எடுத்து சென்றார்,

இது முதல் போட்டி என்றாலும் இன்னும் தன்னை ஒரு கேப்டனாக மெருகேறிக்கொள்வார் சஞ்சு என்ற அதீத நம்பிக்கை இருக்கிறது,அதோடு மட்டுமில்லாமல் தன் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் தகுந்த பதிலடியை சஞ்சு கொடுக்க வேண்டும்,அப்போது தான் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மீண்டும் சஞ்சுவின் பெயர் இடம் பெரும்,ஏனென்றால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்திற்கு இப்போது நம் அணியில் பெரும் போட்டி நிலவுகிறது,

மனிதன் என்றால் சில தவறுகளை கண்டிப்பாக செய்வான்,தவறுகளை திருத்திக்கொள்பவன் தானே மனிதன்,இது பெரிய போட்டி நிறைந்த உலகம்,இங்க நீங்க ஜெயிக்கணும்ன்னா உங்கள மீண்டும் மீண்டும் நிரூபிச்சுட்டே இருக்கணும் சஞ்சு,

இது கேப்டன்சியோட ஆரம்பம் தான்,இன்னக்கி மேட்சோட பெரிய சேவியர் இன்னிங்க்ஸ் ஆடிக்கொடுத்து இருக்கீங்க ஒரு தலைவன் என்ற முறையில்,

Don’t Give Up Sanju!

இது தான் உன் டைம்
போட்டு தாக்கு போட்டு தாக்கு!

Picture Credits : ராஜஸ்தான் ராயல்ஸ் Official Handle

Related posts

மோதி விளையாடு – ஐபிஎல் 2021

ஐசிசி டி20 உலக கோப்பையை அடுத்த ஆண்டு நடத்தலாம் | பயிற்சியாளர் கேட்டிச்

Penbugs

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகள்: பிசிசிஐ அறிவிப்பு

Kesavan Madumathy

When Dhoni turned the clock back | IPL 2021 | DC vs CSK

Penbugs

Weird that only Playing XI Sanju Samson doesn’t find a place is that of India: Gambhir

Penbugs

Top three Buys in this 2021 IPL Mini Auction

Aravindhan

There is no CSK without Dhoni: N Srinivasan

Penbugs

There are few World Cups to be won: Rohit Sharma

Gomesh Shanmugavelayutham

The Nascent: Shivam Dube

Penbugs

The Fielding marvel- Nicholas Pooran

Penbugs

Tewatia and Parag takes Royals home against Sunrisers

Penbugs

Tendulkar on Warner’s dismissal to Archer

Penbugs

Leave a Comment