Editorial News Editorial News

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இறுதி வாக்காளர் பட்டியலில் ஒட்டுமொத்தமாக 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 (6,26,74,446) வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3,18,28,727 பேர் இடம்பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்திலேயே சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும், துறைமுகம் தொகுதி குறைந்தபட்ச வாக்காளர்களைக் கொண்டதாகவும் உள்ளது.

அதன்படி, 6,94,845 வாக்காளர்கள் சோழிங்கநல்லூர் தொகுதியிலும், துறைமுகத்தில் 1,76,272 வாக்காளர்களும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சத்து 98 ஆயிரம் பேர் தபால் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட , பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். தபால் வாக்கு அளிப்பதற்காக சிறப்பு படிவம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமானோர், தபால் வாக்கு போட தகுதி பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related posts

Corona Outbreak: 2 new cases in Delhi and Telangana

Penbugs

மதுரையில் அதிர்ச்சி

Penbugs

3 men arrested for running fake bank branch

Penbugs

Avoiding public gatherings matters most: Dr Madan Gunasekaran on Corona outbreak

Penbugs

Mumbai on hold due to major power failure

Penbugs

அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் பாமக…!

Kesavan Madumathy

COVID-19: Milk will not be sold after 9 am in TN

Penbugs

Viral video: Priest raises hand to bless little girl, she gives him high-five

Penbugs

Corona Virus: Government launches WhatsApp chatbot

Penbugs

மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்

Penbugs

COVID19: TNSDC partners with Coursera to train 50000 unemployed youths

Penbugs

Facebook acquires GIPHY, to integrate more into Instagram

Penbugs

Leave a Comment