Editorial News Editorial News

தைப்பூசத் திருவிழாவிற்கு இனி பொதுவிடுமுறை- முதல்வர் எடப்பாடி

தமிழ் பண்டிகையான தைப்பூசம் திருநாள் இந்த வருடம் முதல் பொது விடுமுறை என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில்
கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா.

இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி,
கேரள மாநிலத்திலும் சிறப்பாக
கொண்டாடப்படுகிறது.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும்
இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக
கொண்டாடப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை
மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை
அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை
அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை
பரிசீலித்து ,வரும் ஜனவரி
28ம் நாள் அன்று
கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக
அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது
விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.”

தைப்பூசம், ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

Related posts

தமிழ்நாட்டு சமையலில் இறங்கி அடித்த ராகுல் காந்தி

Penbugs

Vidyu Raman gets engaged to Sanjay Watwani

Penbugs

Deadline for Aadhar-Pan card linking extended

Penbugs

India attacks terror camps across LoC in reply to Pulwama attack

Penbugs

Paytm removed from Google Playstore for violations

Penbugs

Padma Awardees | Complete List | 2020

Anjali Raga Jammy

அக்டோபர் 1-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்

Penbugs

குடும்ப அட்டைகளுக்கும் மே மாதத்துக்கான பொருள்கள்: இலவச டோக்கன் வழங்கும் பணி நாளை தொடக்கம்

Penbugs

பாமக முதற்கட்டமாக 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

FIVE SIMPLE LIFE TIPS YOU SHOULD KNOW

Penbugs

IPL 2020, Match 1, MI v CSK – Du Plessis, Rayudu take CSK home

Penbugs

Leave a Comment