Cinema

தமிழ் சினிமாவில் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கு மட்டும் அனுமதி!

கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ் சினிமாவில் படப்பிடிப்புக்குப் பிந்தைய (போஸ்ட் ப்ரொடக்ஷன்) பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்க அளிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மே மாதம் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் கரோனா ஊரடங்கில் தமிழ் சினிமாவில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்க அளிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இதுதொடர்பாக தமிழ்த் திரையுலகினர் சார்பாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜிவிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அரசு அதை பரிசீலித்து தக்க சமயத்தில் உரிய முடிவு எடுக்கும் என்று அப்போது அமைச்சர் தெரிவித்திருந்தார்.

தற்போது அரசுத் தரப்பில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, திரைத்துறையினருக்கு பொது முடக்கத்தில், படப்பிடிப்பு முடிந்துள்ள திரைப்படங்களுக்கு தயாரிப்புக்கு பிந்தைய பணிகளுக்கு (போஸ்ட் புரொடக்‌ஷன்) மட்டும் வரும் 11 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கபட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான நடைமுறை விதிமுறைகளையும் அரசு அறிவிக்க உள்ளது.

தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Sidharth Malhotra to Star in Hindi Remake of Thadam

Penbugs

He showed what I’m to me: Rajinikanth about Balachander

Penbugs

மாஸாக வெளியான வக்கீல் சாப் டிரைலர்

Penbugs

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Penbugs

Thank you, Chi La Sow

Penbugs

I’m not a star son, I’m in bollywood because of friendship: Vidyut Jamwal

Penbugs

How Kaatru Veliyidai threw a dart at its plot and took us on a trip to uncharted regions in love

Lakshmi Muthiah

Actor Aarya extends his support to Motor cycle rally awareness on ‘Stroke’ by greeting the riders

Penbugs

Prabhas and Deepika Padukone in Nag Ashwin’s next

Penbugs

Archana Kalpathi, an epitome to “down to earth”

Penbugs

மகாமுனி..!

Kesavan Madumathy

நேர்கொண்ட பார்வை..!

Kesavan Madumathy