Editorial News

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 6 ம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் …!

மே 2 ஆம்‌ தேதி வாக்கு எண்ணிக்கை- தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் அறிவிப்பு வெளியாகின.

செய்தியாளர்கள் கூட்டத்தில் சுநீல் அரோரா பேசுகையில், கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும், சுகாதாரத்துறையினர் மூலம் அதனை எதிர்கொண்டு வருகிறோம்.

தேர்தல் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் பணி பெரும் பங்கு வகிக்கும்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது; அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் இறுதியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அரசாணைகள், பதிவுகள் குறித்த அறிக்கையை அனுப்பி வைக்கவும் தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு.

சுமார் 88ஆயிரம் வாக்குச் சாவடிகள் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளன- தலைமை தேர்தல் ஆணையர்

அனைத்தும் வாக்கு சாவடிகளும் கீழ் தளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது – சுனில் அரோரா

80 வயது மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. எனினும் இது கட்டாயம் கிடையாது.

வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தலைமை தேர்தல் ஆணையத்தின் சிறப்பு பார்வையாளராக அலோக் வர்தன் நியமனம்;

காவல்துறை பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் சென்சிட்டிவ் என்பதால் தேர்தல் செலவின பார்வையாளர்களாக மதுமாதன், பாலகிருஷ்ணன் என இரண்டு பேரை நியமித்துள்ளோம்” – சுனில் அரோரா

பண்டிகைகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன; அனைத்து வாக்கு சாவடிகளும் சானிட்டைசர், குடிநீர் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்படும் – சுனில் அரோரா

Related posts

Dream 11 IPL- RCB vs KXIP: Fantasy preview

Penbugs

தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் மாற்றம்

Penbugs

COVID19 in Chennai: Change in Metro Timings

Kesavan Madumathy

Breaking- PSL 2021 Postponed

Penbugs

பணியிலிருந்து நீக்கப்பட்ட 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி – மு.க.ஸ்டாலின்

Penbugs

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு அதிரடி தடை: அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

Penbugs

Power Shutdown likely in parts of Chennai on Sep 5th; Here’s the list of areas

Penbugs

WAU vs VCT, Match 11, Australia ODD Cup 2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Penbugs

Air India Express flight en route Dubai splits into two while landing; many injured

Penbugs

Maradona refused to cut football shaped cake: Vijayan

Penbugs

சென்னை மெட்ரோ ரயிலில் 50% கட்டணம் தள்ளுபடி

Kesavan Madumathy

மூத்த நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி காலமானார்

Kesavan Madumathy

Leave a Comment