தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, மளிகை உள்பட அனைத்துக் கடைகளும் நாளை முழுவதும் அடைக்கப்பட்டிருக்கும்.
கடந்த மாதம் 19ம் தேதி தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கில் ஜூலை மாதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் ஜூலை மாதம் 5,12,19, 26 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் இம்மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
தளர்வுகளற்ற ஊரடங்கின் போது வாகனங்களில் சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இரவு முதலே முக்கிய சாலைகள் தடுப்புகள் போடப்பட்டு மூடப்பட்டு விடும்.
திங்கட்கிழமை காலை 6 மணிக்கு இந்த ஊரடங்கு தளர்த்தப்படும்.
Jofra Archer talks about unfair criticism and racist replies during lockdown