Penbugs
CoronavirusEditorial NewsFashionGadgets

ஒடிசாவில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்த தங்க மனிதன்

ஒடிசாவில் தங்க மனிதன் என்று அழைக்கப்படும் தொழிலதிபர் 3.5 லட்சம் ரூபாய் மிதிப்பிலான தங்க முகக் கவசத்தை வாங்கி அணிந்து வருகிறார்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முகக்கவசம் அணிய அரசு வலியுறுத்தியுள்ளது. நிறுவனங்கள் வித்தியாசமான ஸ்டைலில் முகக்கவசத்தை தயாரிக்க தொடங்கின. மக்களும் அதை விரும்பி அணிந்து வருகின்றனர்.

புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுமார் 3 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட தங்க மாஸ்க் அணிந்து காட்சியளித்தார். ஷங்கர் குராடே என்ற அந்த தொழிலதிபர் இந்தியா முழுவதும் பேசும்பொருளாகினார்.

தற்போது அவரால் ஈர்க்கப்பட்ட ஒடிசா மாநிலம் கட்டாக்கில் தங்க மனிதன் என்று அழைக்கப்படும் அலோக் மொகந்தியும் தங்க முகக்கவசம் அணி விரும்பினார். அவர் 3.25 லட்சம் ரூபாய் செலவில் தங்க இழைகளால் தயாரிக்கப்பட்ட என-95 முகக்கவசத்தை அணிந்து வருகிறார்.

இதுகுறித்து அலோக் மொகந்தி கூறுகையில் ‘‘நான் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவர் தங்கத்திலான முகக் கவசம் அணிந்திருந்ததை டி.வி.யில் பார்த்தேன். எனக்கும் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் இருப்பதால் அவர் வாங்கிய அதே இடத்தில் முகக்கவசம் தயாரிக்க கூறினேன்.

நான் அணியும் என்-95 மாஸ் 90 முதல் 100 கிராம் வரையிலான தங்க இழைகளால் தயாரிக்கப்பட்டது. அதில் மூச்சு விடுவதற்கான சிறிய துளை உள்ளது. அது எனக்கு வசதியாக இருக்கிறது.

மக்கள் என்னை தங்க மனிதன் என்று அழைப்பார்கள். ஏனென்றால், நான் தங்கத்தை விரும்புகிறவன். கடந்த 40 ஆண்டுகளாக தங்கள் அணிந்து வருகிறேன். மும்பை நபர் மாஸ்க் அணிந்ததை பார்த்ததும் நானும் அவ்வாறு அணிய விரும்பினேன்’’ என்றார்.

Picture: ANI!

Related posts

முகக்கவசம் அணிந்தாலும் விரைவில் அடையாளம் கண்டு அன்லாக் ஆகும் புதிய வசதியை வெளியிட்டது ஆப்பிள்…!

Kesavan Madumathy

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை துவங்கியது ‌..!

Penbugs

சென்னையில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம்

Kesavan Madumathy

கோயம்பேட்டில் ஐந்து ரூபாய்க்கு தானியங்கி கருவியில் முகக்கவசம் விற்பனை

Penbugs

இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்

Penbugs

Priest beheads a man in Odisha claiming to put an end to Coronavirus

Penbugs

Odisha: Police suspended for repeatedly raping 13YO girl

Penbugs

COVID19: Australia not to use saliva, sweat to shine ball after returning to cricket

Penbugs

Leave a Comment