தமிழகத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதித்தோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 324 பேருக்கு கொரோனா உறுதி.
தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,500ஐ கடந்தது!
இன்று மட்டும் 31 பேர் குணமடைந்துள்ளதால், கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 1,516 ஆக அதிகரித்துள்ளது.
