தமிழகத்தில் புதிதாக 6,984 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,47,129ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 18 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,945ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 3,289 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 2482 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
