தமிழகத்தில் மே 10ம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மளிகை கடைகள், டீக்கடைகள், இறைச்சி கடைகள் – தினமும் 12 மணி வரை இயங்கும்,
டாஸ்மாக் திங்கள் முதல் இயங்காது, அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கும்.
இன்று(சனி), நாளை(ஞாயிறு) அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி – தமிழக அரசு
மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை, வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை இயங்கவும் தடை.
அத்தியாவசியப் பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி.
தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் செயல்படாது.
நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு ஊரடங்கு காலத்தில் தடை.
நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.
பெட்ரோல், டீசல் நிலையங்கள் வழக்கம் போல செயல்பட அனுமதி.
அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன்பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவர்.



