Penbugs
Short Stories

தேநீர் கடை..!

ஆம்..கொரொனாவை போலவே தேயிலை கண்டுபிடிக்கப்பட்டதும் சீனாவில்தான்.

ஆனால்..இன்று உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது.

வரலாறு போதும் கதைக்கு வருவோம்

டீ கடைகள்
அதிகாலை 4:30க்கு பளபளவென துலக்கி பட்டை இட்டு குங்குமம் வைத்த பாய்லர்
பக்கத்தில் காய்ச்சிய பால் கொதிக்கும் தண்ணீரில் தேயிலை கொட்டியதும் வரும் முதல் வாசம்.

அப்படியே எடுத்து கண்ணாடி க்ளாஸில் கொஞ்சம் ஊற்றி பாலோடு சர்க்கரை சேர்த்து மேலும் கீழும் தூக்கி ஒரு ஆத்து ஆத்தி(அது ஒரு தனி கலை) கொஞ்சம் பால் ஏடு போட்டு
நம் கைகளில் மாஸ்டர் தரும் போது மகிழ்ச்சியும் அது தொண்டைக்குள் இறங்கும்போது சொர்க்கமும் தெரியும்.

அவை வெறுமே டீகடைகள் அல்ல
உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை அலசி ஆராய்ந்து கிழித்து தொங்கவிடப்படும் இடமும் கூட..

சினிமா விமர்சனங்களும் தப்புவதற்கில்லை..!!
தேநீர் கடையில் கதை,கவிதை ஏன் காதல் கூட மலர்வது உண்டு.

மனச்சிக்கல் தீரவும் மலச்சிக்கல் தீரவும் டீக்கடைகள் உதவியது வரலாறு.

மாஸ்ட்டர் ஒரு டீ..
ஸ்ட்ராங்கா, லைட்டா, சக்கரை இல்லாம..தூள் மாத்தி போட்டு.. இதெல்லாம் வாடிக்கையாளருக்கும் மாஸ்டருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி.

சாதா,ஸ்பெஷல் டீ(க்ளாஸ் கழுவி)
இஞ்சி,மசாலா, ஏலாக்காய்,லெமன்
இதெல்லாம் டீக்கடையில் ஜிகினா வார்த்தைகள்.

ஒவ்வொரு ஊரிலும் பேர் சொல்லும் ஒரு டீ கடை இருக்கும்.
எங்க ஏரியா மாப்பிள்ளை கடை
டீயும் மலாய் பன்னும் ரொம்பவே ஃபேமஸ்.

அதிகாலை முதல் நடுநிசி வரை டீக்கடைகள் மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் இயங்கும்.

கோயில் இல்லா ஊரில் மட்டுமல்ல தேநீர் கடை இல்லா ஊரிலும் குடி போக முடியாது.

இப்படி வெவ்வேறு வரலாறும் கதைகளும் கொண்ட தேநீர் இந்தியாவின் தேசிய பானம் என்றால் மிகையில்லைதானே..!!

தேநீர் குடித்தவுடன் உற்சாகத்தால் மூளையில் தேனீயின் சுறுசுறுப்பு கிடைக்கும்.

இத்தனை நிகழ்வுகளும் நினைவுகளும் கொண்ட தேநீர் கடையை திறக்காமல்
மதுக்கடையை திறப்பது…?

டீக்கடை அத்தியாவசியம்
மதுக்கடை ஆடம்பரம் அனாவசியமும் கூட..

©பூவேந்தன்

Related posts

வித்யாசாகர் எனும் சேமிப்பு காதலன்

Shiva Chelliah

மொழி – ஓர் உந்துதல் !!

Shiva Chelliah

Fight with my mom

Penbugs

நேர் முகம்(ன் )

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்,

Shiva Chelliah

Au Revoir [Book Review]: The Pain and the Glory of Being a Doctor

Lakshmi Muthiah

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்..!

Shiva Chelliah

கரைகின்ற நொடிகளில்..!!

Shiva Chelliah

சிட்டு..!

World Tea Day..!

Shiva Chelliah

உலக இசை தினம் இன்று …!

Kesavan Madumathy