Cinema Inspiring

தூதுவனின் இசை வருகை!

So, ஒரு ஸ்பெஷல் பெர்சன் பிறந்தநாள்
இவருக்கு நான் எழுதலேனா என்னோட
எழுத்துக்கள் நிச்சயம் முழு வடிவம் பெறாது,
அப்படி ஒரு பெரும் தாக்கத்தை தினமும்
ஏதோ ஒரு வகையில் எனக்கு கொடுத்து
கொண்டு தான் இருக்கிறார்,

லிங்கா படத்துல ஒரு வசனம் ரஜினி
சார் சொல்லுவாரு,இன்னக்கி நான்
செஞ்ச காரியத்துனால பல தலைமுறைகள்
வாழப்போதுடா – ன்னு,அப்படி தான்
இவரும்,

Field Out ஆன ஒரு இசை அமைப்பாளருக்கு
எப்படி இவளோ Hype இன்னும் சமூக
வலைத்தளங்களில் இருக்குன்னு நிறைய
பேர் குழம்பி போய் இருக்காங்க,அதுக்கு
காரணம் இவர எல்லாருக்கும் பிடிக்கும்,

ஒரு தனிப்பட்ட இசை அமைப்பாளருக்கு
ரசிகனா இருக்கவங்க கூட இவரோட
பாடல்கள் கேட்கும் போது எங்கோ
தொலைத்த ஒரு நிகழ்வை மீள் நிலையாக
தங்களுக்குள் உணர்ந்து கேட்க
ஆரம்பிக்கும் போது அவர்களின் சுயம்
அறியாமலே இவர் தன் இசை மூலம் இவர்
உருவாக்கிய Adventure இசை உலகிற்கு
அவர்களை கூட்டி வருகிறார்,

ஒரு ஜனரஞ்சக ரசிகனுக்கு நாம்
கொடுக்கும் பாடலை எவ்வாறு
கொடுக்கிறோம் என்பதில் இவர் மிகவும்
தெளிவாக இருப்பார்,நம்ம ஊர்ல சிங்கர்ஸ்
அதிகம் அது ரொம்பவே அழகான
விஷயம்,புது புது குரல்கள் மக்களுக்கு
அறிமுகம் ஆகும் போது,நிறைய
புதுப்பாடகர்களை அறிமுகம் செய்தது
மட்டுமல்லாமல் தன்னிடம் இருந்து
மக்களுக்கு செல்லப்போகும் பாடலில்
இவரின் மெனக்கெடல் மற்ற இசை
அமைப்பாளர்களை காட்டிலும் கொஞ்சம்
அதிகமாகவே இருக்கும்,

இங்கு பல பேர் இதை
செய்வதில்லை,தங்களின் இசையை
மட்டுமே மக்களுக்கு சேர்க்க நினைக்கும்
அவர்கள் பாடல் வரிகளுக்கு சரியான
முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற
பேச்சு இங்கு இருந்து வருகிறது,

பாடல் பாடும் பாடகர்கள் உச்சரிக்கும்
மொழியின் சுவை,பாடல் வரிகளும் இசை
மெட்டும் முன்னும் பின்னும் இல்லாமல்
ஒரே நேர்கோட்டில் அலைவரிசை செய்யும்
வித்தை,சர்கார்ல விஜய் சொல்லுற மாதிரி
இவருக்கும் கொஞ்சம் மாத்தி சொல்லலாம்,

Music & Lyrics Travel in Same Wavelength
& Same Setup of Progress – இந்த Brand
Create பண்ணுறதுல தான்டா நான்
ஸ்பெஷலிஸ்ட்டே – ன்னு தன்னோட Crystal
Clear Sound Produce – ல ஹாரிஸ் தன்னோட
தேவையை இங்க பதிச்சுட்டே இருக்கார் ஒரு
இசையின் அங்கமா,

ஒரு இசை அமைப்பாளன் இவ்வளவு
செய்தும் ஏன் ஒரு நேரத்தில் தோற்று போய்
முடங்கி கிடக்கிறான் என்ற சந்தேகம் தான்
எல்லாருக்கும்..?

Generation Develop ஆக ஆக இங்க
இருக்கவங்களோட ரசனை மாற்றம்
அடைஞ்சுட்டே இருக்கு,இங்க ஒரு
வார்த்தைய கண்டிப்பா சுட்டி காட்டி
ஆகணும்ன்னு ஆசை படுறேன்,

” Instant – உடனடியாக “

என்னடா இதை இங்க சொல்லுறான்னு
நினைக்க வேண்டாம்,உங்க எல்லாருக்கும்
பழக்கப்பட்ட வார்த்தை தான்,ஆனால் இந்த
பொது வார்த்தை தான் இப்போது
விதையில் இருந்து மரமாக மாறி எழுச்சி
பெற்று நிற்கிறது,

வாழ்க்கையிலும் சரி,விளையாட்டிலும்
சரி,பொழுது போக்கிலும் சரி எல்லா
இடங்களிலும் ” Instant ” ஒரு பெரும்
பிரச்சனையாக இருந்து வருகிறது,

ஒருத்தன் தன்னோட பசுமையான கல்லூரி
நாட்களை முடித்து தன் வாழ்வின் அடுத்த
அத்தியாயத்துக்கு ஒரு படி எடுத்து
வைக்கும் போது அவன் மேல் ஒரு பெரும்
சுமை ஏற்றப்படுகிறது,இப்போ உனக்கு
இருபது வயசு,இன்னும் ஆறு
வருஷத்துக்குள்ள நீ வீடு வாங்கணும்,
Bank Balance வச்சுருக்கணும்,நம்ம வீட்டு
தேவைகளை சரி செய்யணும்ன்னு
இதெல்லாம் செஞ்சா தான் உனக்கு
கல்யாணம்னும் இது எல்லாம் ” Instant ” ஆ
மாறணும்ன்னு அழுத்தம் கொடுக்குறப்போ
அவனோட வருங்காலம் பற்றிய பயம்
அவனை தொற்றிக்கொள்கிறது,

ஒரு ப்ரித்வி,ஒரு மயங்க்,ஒரு சிராஜ்,
இங்க தங்ககிட்ட முழுமையான திறமை
இருந்தும் ஒரு நேரத்துல சுத்தமா அந்த
Vibe கிடைக்காம தோற்று போகும் போது
அவர்களின் Replacement தான் யார் என்று
தேடுகிறோமே தவிர தோத்து போன
இவங்கள அடுத்து பொருட்படுத்துறதே
இல்ல,விளையாட்டுல கூட ” Instant ” – உன்ன
ஒரு சீரிஸ் ரெண்டு சீரிஸ் தான் விளையாட
வைப்போம் அதுக்குள்ள நீ Perform
பண்ணனும்ன்னு Create the Pressure,First Class –
ல இருந்து Big Stage வரவங்ககிட்ட இந்த “
Instant ” இங்க மிகப்பெரிய பிரச்சனையா
இருக்கு,

பொழுதுபோக்கின் அம்சமான
திரைப்படங்களில் நடிக்கும் அறிமுக
நடிகர்களிடம் கூட ” Instant ” பயம்
இருக்கிறது,அறிமுக நடிகனுக்கோ
இயக்குனருக்கோ முதல் படம்
வெற்றியானால் மட்டுமே அடுத்த
வாய்ப்புகள் இங்கே அமையும்,
இல்லேன்னா நம்மல
ஓரங்கட்டிருவாங்கன்னு நினைச்சு
நினைச்சே அவங்க தங்களோட தன்மை
மாறிடுறாங்க,பெரிய நடிகர்களும்
இயக்குநர்களுக்குமே இது பொருந்தும் “
Instant Hit ” கொடுக்கணும்,

இந்த ” Instant ” – ஆல் தோல்வியை
ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்
இல்லாமல் போய்விட்டது
ஒவ்வொருவருக்கும்,தோல்வியை
ஏற்றுக்கொள்ளாதவனுக்கு வெற்றியின்
சுவை மட்டுமே தெரியும்,தோல்வி
அடைந்தவனின் வலியை அறியமாட்டான்,

விடியலில் ஒரு வெளிச்சம் பிறக்கும்
என்று காத்திருப்போர் மத்தியில் நானும்
காத்திருக்கிறேன்,

விழுந்தாலும் விதையாய் விழுவோம்
எழுவோமே மரமாய் நாளை
மழை தரும் அந்த மேகம் போல
நாளை ஊர் குளிரும் இவன் வருகையால்,

தூதுவன் வந்த பிறகு தான் சோழனின்
பயணம் தொடர்ந்தது போல் இந்த இசை
தூதுவனும் மீண்டு(ம்) வருவான், அப்போது
நாம் கேட்கும் இசையை புதிய
பரிமாணத்தில் அவன் கொடுப்பான்,

தோல்வியும் துவண்டு போகும்
நிலையும் நிரந்தரம் இல்லை,அடுத்து
கிடைக்கப்போகும் பெரும் வெற்றிக்கு நீ
சரியானவனா என்று உன்னை சோதித்து
பார்க்கும் ஓர் முயற்சி,

வலியில்லாமல் வாழ்க்கையில்லை
தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை,

If You do not Get Failure in Life
You will not Know the Value at Success,

  • Sourav Ganguly : )

Picture Courtesy : Behindwoods

Related posts

Prithviraj Sukumaran tested positive for coronavirus

Penbugs

Pandya Brothers sing ‘Kolaveri Di’

Penbugs

‘ஜகமே தந்திரம்’திரையரங்கில் வெளியாகும்: தனுஷ் நம்பிக்கை..!

Penbugs

‘Bad Boy’ from Saaho

Penbugs

Pass my best to your wife: Smith’s message to Kohli

Penbugs

First look of Kavin-Amritha Aiyer starrer is here!

Penbugs

Dear Anbana Director, Vignesh Shivn..!

Penbugs

Breaking: Viswasam movie update

Penbugs

ஹிப்ஹாப் ஆதி…!

Penbugs

ஆமிர்கானின் உதவியாளர்‌ மரணம் : இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஆமிர்

Penbugs

| 24 – A Vikram Kumar’s Sci – Fi Theory |

Shiva Chelliah

Vale, Professor Deano | Dean Jones

Penbugs

Leave a Comment