ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 25 கோடிப் பேர் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மது மற்றும் புகையிலைப் பொருட்களை உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், கஞ்சா, அபின், கோகைன், பிரவுன்சுகர் ஆகியவை கரையான் புற்று போல் இளைஞர் சமூகத்தை அழித்து வருகின்றன.
தனி நபரின் உடல், மனம் இரண்டையும் சிதைப்பதுடன், சமூகத்திற்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன இந்த போதைப் பொருட்கள். இந்தப் பழக்கத்திலிருந்து மீளவே முடியாது என்ற சூழலில் தற்கொலைகளில் போய் முடிகின்றன.
உலகளாவிய ரீதியில் போதைப் பொருள் பயன்படுத்தல், போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை செய்தல் என்பன ஒரு முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. போதைப் பொருளைக் கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் முகமாக ஏற்படுத்தப்பட்ட தினமாகவே உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் காணப்படுகிறது.
இதனை குறிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளியில் கொரோனா தொற்றியிருந்தது மீண்டு விடலாம் ஆனால் போதை மருந்து பழக்க அடிமையிலிருந்து மீள முடியாது என்று ரகுமான் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் போதை மருந்துகளை பயன்படுத்தாத வகையில் அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து மக்களின் உடல் நலனை காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் .

Parvathy calls out misogyny in Arjun Reddy in front of Vijay Devarakonda