Penbugs
CricketInspiringMen Cricket

விரல் வித்தைக்காரனின் வியூகம்

ஒருத்தன் ணே!

யாரோ சென்னை லோக்கல் கை – யாம்
மரண காட்டு காட்டிட்டான் ணே,

The New GOAT in Kollywood Town – ன்னு பேசிக்குறாங்க,

ஹலோ ஹலோ!

ரெகார்டஸ் பார்த்துட்டு வாங்க!

And Ravichandran Ashwin Nahi
Our Proud One & Only ” Ash (naa) ” Bolo,

அவன் New GOAT – லாம் இல்ல
உங்க GOAT குக்,ஸ்டோக்ஸ்,
ஆஸ்திரேலியா GOAT ஸ்மித் – ன்னு
அவன் Spell – ல மாட்டி சின்னாபின்னமான
பல GOAT’s கதைகள் இங்க வீட்டுல
Frame செஞ்சு வச்சுக்குற அளவு
” சொல்லி அடிக்கிற கில்லி “
கதைகள் பல இருக்கு எங்க கிட்ட,

“I Can’t wait for you to Come to India,
that will Be Your last Series.”

இந்த ஸ்டேட்மென்ட்ட ஆஸ்திரேலியா
கேப்டன் டிம் பைன் கிட்ட அஸ்வின்
சொன்னப்போவே புரிஞ்சுருக்கும்
Indian Soil – ல அஸ்வின் Spell எப்படி
இருக்கும்ன்னு, பேட்ஸ்மேன Sledge
பண்ணி அவுட் ஆக்குறது ஒரு யுக்தின்னா
அதே பேட்ஸ்மேன Mind Game யூஸ் பண்ணி
அவுட் பண்ணுறது ரொம்ப ஸ்பெஷல்,ஆனா
இது எல்லாராலையும் எல்லா இடத்துலயும்
பண்ண முடியாது,பட் இதுக்கு முன்னாடி
Mind Game – ல பேட்ஸ்மேன அவுட் ஆக்குன
ஆளுங்கள பத்தி எனக்கு கவல
இல்ல,ஆனா என் கதையே வேற – ன்னு
அஸ்வின் இங்க இன்னக்கி நிரூபிச்சி
காமிச்சுருக்கார்,First Innings – ல பென்
ஸ்டோக்ஸ் விக்கெட் வாங்குன பால்
சொல்லும் என் அஸ்வின GOAT – ன்னு
இங்க எல்லாரும் சொல்லுறாங்கன்னு,

இதையெல்லாம் விட ஸ்பெஷல்
சென்னை சேப்பாக்கம் கிரவுண்ட்,
அஸ்வின பொறுத்தவரைக்கும்
புருஷன் வீட்ல இருந்து அம்மா வீட்டுக்கு
வந்த பொண்ணு போல குஷி ஆகிடுவாரு
சேப்பாக்கம் – ன்ற இந்த பெயர கேட்டாலே,

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னாடி
ஆங்கிலக்காரர்களோட கோட்டையா
இருக்கலாம் சென்னை,ஆனா அதே
இப்போ ஆங்கிலக்காரர்கள் இங்க
சேப்பாக்கம்ல விளையாடுறப்போ இது
என்னோட ” பேட்ட ” – ன்னு அஸ்வின் WARN
பண்ணது மட்டும் இல்லாம அதற்கேத்த
தண்டனையும் கொடுத்து இருக்காருன்னு
சொல்லலாம்,இதையெல்லாம் தாண்டி
அஸ்வின் ஒரு ” Crickipedia ” – ன்னு
சொல்லலாம்,சேப்பாக்கம் பிட்ச் பத்தி
அஸ்வின் அளவு யாராலயும் கணிக்க
முடியாதுன்னு தன்னோட Presence மூலமா
டோட்டல் டாமினேஷன் பண்ணிருக்காரு,

சரி பௌலிங்ல அஸ்வின் எவளோ பெரிய விரல் வித்தைக்காரர்ன்னு நமக்கு நல்லாவே தெரியும்,Bowling All Rounder – ன்றது இன்னொரு விஷயம்,அவர் அடிச்ச Previous நான்கு சதங்கள் வச்சு அவரோட Batting Ability – யும் நமக்கு தெரியும்,

ஆனா ஸ்பின் டாமினேஷன் பிட்ச்ல
நம்ம பேட்ஸ்மேன்ஸே அடி பணிஞ்சு
விக்கெட் கொடுத்துட்டு போனப்போ
அந்த Pressure Situation – ல அஸ்வின்னால
எப்படி செஞ்சுரி போட முடிஞ்சுச்சுன்னு
இங்கிலாந்து காரனே மண்ட
காஞ்சுருப்பான்,இதற்கு பதில் ஏற்கனவே
மேல சொல்லிட்டேன் நான்,இந்த பிட்ச் பத்தி
அஸ்வின் அளவு தெரிஞ்சவங்க யாருமில்ல
இது அவரோட பேட்ட – ன்னு,தன்னோட
கணிப்பு சரியா இருக்கப்போ Sweep,
Reverse Sweep – ன்னு ஒரு Pure பேட்ஸ்மேன்
Rhythm – லயும் கிரவுண்ட்ல இருந்த நம்ம
பசங்களோட உற்சாகத்தின் மிகுதிலயும்
இன்னக்கி நம்ம எல்லாரையும்
என்டேர்டைன்மெண்ட் பண்ணிருக்காரு,

இதையெல்லாம் விட 200 லெஃப்ட் ஹாண்ட்
பேட்ஸ்மேன்ஸ் விக்கெட் வாங்குன நம்பர்
ஒன் பௌலர் – ன்ற வேர்ல்ட் ரெக்கார்ட்
அலெர்ட்ட அஸ்வின் இந்த தொடர்ல தன்
வசப்படுத்திருக்காரு,

*
டேய் அண்ணா!

இதை ஆரம்பிச்சு வச்சது நீ (கும்ப்ளே)
மறந்துறாத!

சூரசம்ஹார வதம் தொடரும் !!!!!!!!!!!

Picture: BCCI & CCV Trailer

Related posts

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஐந்து கோடி ரூபாய் போனஸ்..!

Penbugs

வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும் – நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

Penbugs

பேட்ட பராக்!

Shiva Chelliah

பழனி முருகன் கோயிலில் மொட்டையடித்த நடராஜன்

Penbugs

சென்னைக்கு வந்தா வீட்டுக்கு வாங்க: நடராஜனுடன் வீடியோகால் பேசிய சரத் குமார்

Penbugs

சின்னபாப்பம்பட்டி திரும்பிய நடராஜன் : பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

Penbugs

சரித்திர நாயகன் தோனி …!

Kesavan Madumathy

எனக்கு அஸ்வின் மீது பொறாமையா ? ஹர்பஜன் சிங் அசத்தல் பதில்!

Penbugs

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

Penbugs

You deserve the man of the series from my side bhai: Hardik Pandya to Natarajan

Penbugs

Will Mankad anyone who goes out of crease: Ashwin

Penbugs

Well done legend, proud for you: David Warner on Natarajan

Penbugs

Leave a Comment