Coronavirus

ஊஹானில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்ததாக அதிகாரிகள் தகவல்

சீனாவின் ஊஹானில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கினாலும் சீன அரசின் அலட்சியத்தால் ஜனவரி மாதத்தின் 2வது வாரத்தில் தான் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது

சீன அரசு நடவடிக்கை எடுப்பதற்குள் பலர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். ஊஹான் மகாணம் முழுவதுமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சீனாவை தொடர்ந்து ஈரான், இத்தாலி, அமெரிக்கா என தனது எல்லையை கொரோனா விரிவுப்படுத்தியது. தற்போது 180 நாடுகளுக்கு மேல் கொரோனா வைரஸ் தடம் படித்துள்ளது. உலகளவில் கொரேனாவால் 30 லட்சம் பாதிக்க்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 லட்சத்தை நெருங்க உள்ளது.

கொரேனாவால் மற்ற நாடுகள் பெரும் தாக்கத்தை சந்தித்து வரும் நிலையில் அதன் ஆரம்ப மையமான ஊஹான் மற்றும் சீனாவில் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாததால் சில நாட்களுக்கு முன் ஊஹானில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்கைக்கு திரும்பினார்கள்.

ஊஹானில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லாத நிலையில் சிகிச்சையில் இருந்த கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் மத்திய மாகாணங்களில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

FM Nirmala Sitaraman addresses nation | Coronavirus | Atmanirbhar

Penbugs

Just because bars are opening, doesn’t mean they are safe: Matthew Perry

Penbugs

In a first, Twitter marks Donald Trump’s tweet as ‘potentially misleading’

Penbugs

Lockdown restrictions announced in TN from May 15

Penbugs

தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு- எடப்பாடி கே. பழனிசாமி

Kesavan Madumathy

We commend your leadership: Bill Gates writes to PM Modi about COVID19

Penbugs

கொரோனா தடுப்பு மருந்து தமிழகம் வந்தது

Penbugs

தமிழகத்தில் இன்று 7,010 பேர் டிஸ்சார்ஜ் | கொரோனா

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2396 பேர் பாதிப்பு

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

COVID19: Shardul Thakur becomes 1st Indian cricketer to begin outdoor practice

Penbugs

US woman in TN fights off rape, slashes culprit with knife

Penbugs