Coronavirus Editorial News

இசையமைப்பாளர் சங்கத்துக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி

கொரோனா லாக்டௌன் மொத்த சினிமாவையும் முடக்கிப்போட்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழிலாளர்கள் என சினிமாவின் அத்தனை அடுக்குகளில் இருப்பவர்களுக்கும் பெரும் துயரங்களுடனேயே நகர்கின்றன.

இந்த நிலையில் இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களும் இந்த லாக்டெளன் காலத்தில் கடுமையான நிதிப்பிரச்னைகளைச் சந்தித்துவருகிறார்கள். ஒரு பெரிய படத்துக்கான இசையமைப்பு வேலைகள் நடக்கின்றன என்றால் 400-500 இசைக்கலைஞர்களுக்கு வேலைகள் கிடைக்கும். இதுதான் அவர்களுக்கான பிரதான வருமானம். இதுதவிர கலைநிகழ்ச்சிகள் நடக்கும்போது அதிலிருந்து கிடைக்கும் வருமானமும் அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்ற உதவும். ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா மட்டுமல்லாமல், வெளியே நடக்கும் கலை நிகழ்சிகளும் இல்லாததால் இசைக்கலைஞர்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதாகச் சொல்கிறார்கள்.

இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான்
வருமானம் இல்லாமல் தவிக்கும் இசைக்கலைஞர்களுக்கு உதவிகள் செய்ய தலா பத்து இலட்சத்தை வழங்கி உள்ளனர்.

இவர்களோடு டி.இமான், அனிருத், ஹிப் ஹாப் ஆதி மூணு பேரும் ஆளுக்கு ரெண்டு லட்சமும், தமன் ஒன்றரை லட்சம், விஜய் ஆண்டனி, ஜிப்ரான் ரெண்டு பேரும் தலா 50,000 என மொத்தமா இருபத்தெட்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் சேர்ந்துள்ளது .

மேலும் திரைப்பட இசைக்கலைஞர் சங்கம் வரும் ஆண்டு உறுப்பினர்களிடமிருந்து சந்தா தொகையை வசூலிப்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளது.

Related posts

Corona Outbreak: Pawan Kalyan donates Rs 2 crores, Ram Charan Rs 70 Lakhs

Penbugs

தமிழகத்தில் இன்று 2817 பேருக்குக் கொரோனா தொற்று

Kesavan Madumathy

ராகுல் காந்திக்கு கொரானா தொற்று உறுதி

Penbugs

ஐடி நிறுவனங்கள் 50 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

Penbugs

PM Modi on JNU attack

Penbugs

மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

Gujarat: Two doctors get back to work hours after mothers’ cremation

Penbugs

Alia Bhatt tested positive for COVID19

Penbugs

Alyssa Healy disappointed to see India pulling out of England tour

Penbugs

PM CARES funds received close to Rs 9500 crores so far

Penbugs

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை

Penbugs

தமிழகத்தில் இன்று 5612 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs