Cinema

என்னை அறிந்தால்!

” Don’ts & Do’s “

இன்டெர்வியூ மாதிரி ஸ்டார்ட்
ஆகுதேன்னு பார்க்கவேணாம் கொஞ்சம்
கிரியேட்டிவ்வா எழுதணும் ஆசை, ஆனா
அந்த கிரியேட்டிவ் முறை இந்த பதிவை
வாசிக்கும் வாசகனுக்கு எந்த அளவு
ஸ்வாரஷ்யத்தையும் அதே இது படிச்சு
முடிச்சோன இந்த பதிவுல இருந்து அவன்
எந்த நல்ல விஷயத்தை எடுத்துட்டு
போறான் அதுல தான் ஒரு
எழுத்தாளனுக்கு கிடைக்குற முழு
சந்தோஷமும் இருக்கு,

இங்க யாருக்கும் அட்வைஸ் பண்ணுற
அளவு பெரிய ஆளான்னு கேட்டா
கண்டிப்பா இல்ல, அதனால நம்ம “தல”
பிறந்தநாள் பதிவுல சில விஷயங்கள்
சொல்லணும் ஆசை, இது அட்வைஸ் –
ன்னு எடுத்துக்கிட்டா அட்வைஸ், கருத்து –
ன்னு எடுத்துக்கிட்டா கருத்து
அவ்வளோதான்,

| தல |

அஜித்குமார் – ன்னு சொல்லுறத விட தல

  • ன்னு கூப்புட்றவங்க தான் அதிகம்,அந்த
    “தல” – அப்படின்ற வார்த்தை அவரோட
    ரசிகன பொறுத்தவரை ஒரு எமோஷனல்
    பாண்ட் என்றே சொல்லலாம்,

” தல ” – ன்ற ரெண்டு எழுத்து திரையில
பார்த்தாலோ வேறு ஏதும் படங்களின்
வசனங்களில் கேட்டாலோ, ஆடியோ
லாஞ்ச் ல எந்த நடிகரும் அந்த
வார்த்தைய சொன்னாலோ ஒவ்வொரு
ரசிகனின் உடம்பிலும் மயிர் கூச்செரியும்
தருணம் அங்கே அரங்கேறுமானால்
அந்த மேடையே அதிருமென்றால் அது
தான் அவரின் பெயர் ” அஜித்குமார் “,

கேளிகளும்,கிண்டல்களும்,
நிராகரிப்புகளும்,அவமானங்களும் பல
கண்டவர் தன்னுடைய வாழ்க்கையில்,
அவர் வந்த பாதை மிகவும் கடினமானது
அங்கே மனித உருவமுள்ள நிறைய
விலங்குகளும் நிறம் மாறும்
பச்சோந்திகளும் அதிகம்,அவற்றை
சமாளித்து அந்த காட்டு பாதையில்
வந்தால் சில தந்திரமான நரிகள்
அவரை ஏமாற்ற காத்திருக்கிறது,
இதையெல்லாம் தாண்டி ஒரு
கலைத்துறைக்குள் வந்தால் வசன
உச்சரிப்பு,நடனம்,உடல் என அடுத்த
கிண்டல்களுக்கு ஒரு அமைப்பு அவரை
அழிக்க காத்துக்கொண்டிருக்கிறது,

ஆனால் தனக்கு என்ன தேவை,எதை
தன்னிடம் வைத்துக்கொள்ள வேண்டும்,
எது தன்னிடம் இருந்து தொலைவில்
இருக்க வேண்டும் என முடிவு செய்து
நான் இப்படித்தான் இது தான் என்னோட
வாழ்க்கை – ன்னு தனக்கு தானே ஒரு
Graph – போட்டு அதுக்குள்ள தன்ன
முடிஞ்சளவு Upgrade செஞ்சுட்டு
வாழ்ந்துட்டு இருக்காரு,

அவர் எப்பவும் சொல்லுற விஷயம் தான்,

என்னோட சினிமா நல்லா இருந்தா
தியேட்டருக்கு வந்து படம் பாருங்க,
உங்க அம்மா,அப்பா,அப்பறம் உங்களோட
ஹெல்த் பாத்துக்கோங்க,ஒரு ரசிகனா
மட்டும் எனக்கு இருங்க,என்னோட
போஸ்டருக்கோ என்னை சார்ந்த
விஷயங்களுக்கோ உங்க பணத்தை
செலவு செய்ய வேணாம் அதுக்கு பதிலா
அந்த பணத்துல உங்க அம்மா
அப்பாவுக்கு ஏதாவது வாங்கிக்கொடுங்க,

ஆனா ஒரு ரசிகனா இதெல்லாம் நீங்க
பண்ணுறீங்களா அதான் கேள்வி இங்க..?

அஜித் – ன்னு இல்ல ஒரு பெரிய நடிகர்
படம் ரிலீஸ் ஆனா இங்க நடக்குற
விஷயங்கள் தான் இதெல்லாம்,

போஸ்டருக்கு பால் அபிஷேகம்
உருவ பேனருக்கு பீரில் அபிஷேகம்
கட்அவுட்கள் செய்ய லட்ச கணக்கில் பணம்,
பட்டாசுகள் வாங்க பணம்,
இப்படி சரமாரியாக பணத்தை
தாராளமாக செலவு செய்வார்கள்
அவர்களின் ரசிகர்கள், மற்ற நடிகர்களின்
ரசிகர்கள் பற்றி எதுக்கு, நீங்கள்
Inspiration வழி பார்க்கும் அஜித் என்ற
மனிதர் இதை ரசிப்பாரா என்று கேட்டால்
நிச்சயம் இல்லை,

ஒரு அஜித்குமார் என்னும் நடிகர் தன்
படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பும் தன்
பிறந்தநாளிற்கு முன்பும் தன் ரசிகர்கள்
ஒரு ரசிகனாக என்ன பண்ண வேண்டும்
என்று Do’s & Don’ts நேர்காணல் வீடியோ
ரிலீஸ் செய்தால் அவர் சொல்லுவது
இதுவாக தான் இருக்கும் என்று ஒரு
சின்ன கற்பனை முயற்சி,

அஜித்குமார் :

எனக்கு ஒரு ரசிகனாக இருந்தால் 150 –
300 ரூபாய்க்கு டிக்கெட்
எடுத்துக்கொண்டு என் படத்தை பார்த்து
திரையில் ரசியுங்கள் போதும், வேறு எந்த
ஒரு செயலும் நீங்கள் பண்ணவேண்டும்
அஜித் என்ற ஒரு சினிமா நடிகனுக்காக,

அதையும் மீறி ஒரு ரசிகனாக என்
படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பும் என்
பிறந்தநாளின் போதும் உங்களுக்கு
கொண்டாட்டம் வேண்டும் என்றால் நான்
இங்கே சொல்லப்போகும் Don’ts & Do’s –
களை Follow செய்யுங்கள் ஒரு ரசிகனாக,

Do’s என்பது கொஞ்சம் கஷ்டம்
நம்ம ஊருல ஈஸியா சொல்லுறது ஈஸி
செய்யுறது தான் கஷ்டம் – ன்னு
சொல்லிட்டு போய்டுவாங்க So, First We
Talk About Don’ts & then Do’s,

| Don’ts | :

  • பாலபிஷேகம் செய்வது
  • பேனர் அடிப்பது
  • கட் அவுட் செய்வது
  • பீர் அபிஷேகம் செய்வது
  • உங்கள் கொண்டாட்டத்தின் போதும்
    உங்கள் விஸ்வாசத்திற்காகவும் மற்ற
    நடிகர்களை தரக்குறைவாக பேசுவது,
  • சமூக வலைத்தளங்களில் மன
    சங்கடத்தை ஏற்படுத்தும் ஹாஸ்டேக்
    பதிவுகள்
  • இன்னும் நிறைய நிறைய

இதை என் ரசிகர்களுக்கு மட்டும்
சொல்லவில்லை என்னை வெறுக்கும்
ரசிகர்களுக்கும் சொல்கிறேன் உங்கள்
தலைவனும் வேண்டுவதும் இது தான்,

Then Next | Do’s | :

ஒரு வேல ரசிகர்கள் ஆகிய நீங்க
என்னோட பிறந்தநாளுக்கு செலவு
செய்யணும் முடிவு பண்ணிட்டா இது
பண்ணுங்க,

  • உங்க அம்மா அப்பா – க்கு உடுத்த நல்ல
    உடை எடுத்துக்கொடுங்க
  • உங்க மகன்/மகள் அல்லது உடன்
    பிறந்தவர்களுக்கு உடை
    எடுத்துக்கொடுங்கள்
  • அனாதை ஆசிரமம், முதியவர்
    ஆசிரமங்களுக்கு சென்று அவர்களுக்கு
    மூன்று நேரமும் சாப்பிடும் படி தரமான
    சத்தான உணவுகளை ஒரு கேட்டரிங்
    உதவியுடன் செஞ்சு அவங்க மனசு
    குளிர்ந்து போற அளவுக்கு நல்லா
    வயிறார சாப்பாடு போடுங்க,
  • உங்க வீட்டு பக்கத்துல இருக்க ரொம்ப
    கஷ்டப்படுற குடும்பத்துல படிக்குற
    குழந்தைகளுக்கு ஒரு மாசத்துக்கு
    தேவையான நோட்டு,பேனா, பென்சில் –
    ன்னு வாங்கிக்கொடுங்க
  • என்னுடைய பெயர் சொல்லி அப்துல்
    கலாம் அய்யா சொன்னது போல
    முடிஞ்சா என் பிறந்தநாள் அப்பவும்
    என்னோட படங்கள் ரிலீஸ் ஆகுற நாள்
    அப்பவும் மரங்கள் நட்டு வைங்க காசு
    கொடுத்து மரக்கன்று மொத்த விலைக்கு
    வாங்கி,
  • இதையெல்லாம் விட என் படத்தின்
    பேனருக்கும் பாலுக்கும் செலவு செய்கிற
    பணத்தில் உங்கள் குடும்பத்தின்
    தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்,

இந்த Do’s எல்லாம் கஷ்டம் இல்ல,
இதை கண்டிப்பாக நீங்க செய்யணும்னு
நான் சொல்லல, ஒரு வேல என்னோட
பிறந்தநாளுக்கும் படம் ரிலீஸுக்கும்
நீங்க செலவு செய்யணும் முடிவு
பண்ணிட்டா எனக்காக இது மட்டும்
பண்ணுங்க உங்களோட ஆசீர்வாதத்தாள
நானும் நல்லா இருப்பேன் நீங்களும் ஒரு
நல்ல விஷயம் பண்ணுனோம் – ன்னு
நிம்மதியா தூங்குவிங்க அன்னக்கி
ராத்திரி,

இந்த முறையில் தான் நம்ம அஜித் சார்
சொல்லியிருப்பார் ரசிகர்களுக்கு,

அவருக்கெதிராக பிறர் பேசும்
கிண்டல்களை ஒரு ரசிகனாக நீங்கள்
எப்படி கையாளவேண்டுமென்றால்,
உங்கள் தலைவனின் மீது இருக்கும்
விஸ்வாசத்தினால் இன்னொரு
தலைவனை இகழாமல் அந்த தலைவன்
பற்றிய தவறுதலான ஹாஸ்டேக்களை
பரப்புவதுமாக இல்லாமல் முடிந்தளவு
மனிதத்தை பரப்புங்கள், ஒரு மாளவிகா
மோஹனன் படம் இன்ஸ்டாவில்
வந்தாலோ அல்லது ரம்யா பாண்டியன்
படம் இன்ஸ்டாவில் வந்தாலோ எப்படி
“இனமென பிரிந்தது போதும்” – ன்னு
ஒன்னு கூடுறிங்களோ அப்படி ஒன்னு
கூடுங்க,

திரும்ப சொல்லுறது ஒன்னு தான்,

ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம்
காட்டுறதுக்காக இன்னொருத்தர ஏன்
அசிங்கப்படுத்துறிங்க..?

(Common Question For Ajith & Vijay Fans)

Finally,

அவர Follow பண்ணுங்க
தன்னம்பிக்கைய வளர்த்துக்கோங்க
உங்க குடும்பத்த பாத்துக்கோங்க
முடிஞ்சளவு அவர போல பிறருக்கு
உதவிகள பண்ணுங்க
அவர் படத்த தியேட்டர்ல போய் பாருங்க,

| * |

” Ajithkumar ” is Nothing Without His Fans,

அவர பத்தி ஒரு பேப்பர்ல நிறைய
எழுதிட்டே போகலாம் பேனாவோட மை
தான் தீர்ந்து போகும், ஆனா அவர் நம்ம
மனசுல உயர்ந்து போய்கிட்டே இருப்பார்,

சால்ட் & பெப்பர் ஏற்கனவே வந்துருச்சு
இனி, ஆக்ஷன மட்டும் வேடிக்க பாரு..!!

*
Live Let Live
வாழு வாழவிடு

HappyBirthdayChief | #AjithKumar❤️

Related posts

சைக்கோ…!

Kesavan Madumathy

Actor-MLA Karunas tested positive for COVID19

Penbugs

1st look poster of Muthiah Muralidaran biopic starring Vijay Sethupathi

Penbugs

I felt like I had no fight left in me: Sushmita Sen on battling Addison disease

Penbugs

In Pictures: Actor Sathish weds Sindhu

Penbugs

Dil Bechara: An intense as well as emotional ride

Penbugs

‘Frozen II’ actress Rachel Matthews tests positive for coronavirus

Penbugs

Sarkaru Vaari Paata: Makers share motion poster on Mahesh Babu’s birthday

Penbugs

நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Kesavan Madumathy

ஹிப்ஹாப் ஆதி…!

Penbugs

Missed the crane by a whisker: Shankar on Indian 2 accident

Penbugs