பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ம் ஆண்டில் இருந்து இதுவரை 58 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்காக, ரூ.517கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் எம்பி பைசியாகான் கேள்விக்கு, மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது :
கடந்த 2015ம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
இதற்காக, மொத்தம் 517.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தலா 5 முறை பயணம் செய்துள்ளார்.
சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு பலமுறை சென்று வந்துள்ளார்.
கடைசியாக, கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 13, 14ம் தேதிகளில் பிரேசில் சென்று வந்தார்.
