Penbugs
Editorial News

பார்டர் கவாஸ்கர் டிராபி-90ஸ் மெமரிஸ்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தொண்ணூறுகள் மிக முக்கியமானவை. இந்திய சிறார்களின் அன்றாட வாழ்வியலில் கிரிக்கெட் ஒரு அங்கமாக மாற துவங்கிய காலகட்டம்..!

தொண்ணூறுகளில் பிறந்த தற்போதைய கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் இதனை கேட்டு கடந்து வந்து இருக்க கூடும் ” படிக்க சொன்னா எழுந்துக்க மாட்ட ஆனா மேட்ச்னா கரெக்டா முழிப்பு வருதா” என்று வீடுகளில் திட்டு வாங்கி அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து லைவ்வாக பார்த்த முதல் டெஸ்ட் தொடர் 2003 ஆலன் பார்டர் – கவாஸ்கர் டிராபி …!

சச்சினின் பேட்டிங்கில் முழுமையாக ஈர்க்கப்பட்டு சச்சினுக்காகவே முதல் இரண்டு விக்கெட்டுகள் சீக்கிரம் விழ வேண்டும் என்று வேண்டிக் கொண்ட காலம் அது ‌…!

அப்போதைய ஆஸ்திரேலிய அணியில் வார்னே இல்லை என்ற நிம்மதி இருந்தாலும் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சு எப்பவும் போல் வலிமையாகவே இருந்தது.

அந்த தொடரில் சமீபத்தில் ஓய்வுபெற்ற பார்த்திவ் குட்டி பையனாக விக்கெட் கீப்பிங் செய்தது முதலில் ஈர்த்த விஷயம்..!

சன்டிவி மட்டும் பெரிதாக இருந்த அந்த நேரத்தில் சன் டிவியின் பிளாஷ் நீயுஸ் கேப்சன்கள் மிகவும் பிரபலம் .

முதல் டெஸ்ட்டில் அம்பயர் ஸ்டிவ் பக்னர் எடுத்த தவறான முடிவால் சச்சின் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற கேப்டன் கங்குலி சதமடித்தார்.

அதற்கு சன்டிவியின் கேப்சன் :

” சர்ச்சையில் அவுட்டான சச்சின் கலங்காது சதம் அடித்த கங்குலி “

அந்த மேட்ச் டிராவில் முடிவடைய ரொம்பவே சந்தோஷம் அப்போதைய காலகட்டத்தில் தோல்வியை தவிர்த்து டிராவிற்கு ஆடினாலே போதும் என்ற அளவிற்கு ஆஸ்திரேலியா அணி சிம்ம சொப்பனமாக இருந்தது அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் அதனை அசைத்து பார்க்க இயலுவது என்பது பகீரத பிரயத்தனம்…!

அடிலெய்டு

இந்த பெயர் ரொம்பவே மனதில் அழுந்த பதிந்த ஒரு பெயர்‌ . அதற்கான காரணம் இந்திய மைதானங்கள் பெயரே அந்த அளவிற்கு பதியாத அக்காலகட்டத்தில் அடிலெய்டில் இந்தியா பெற்ற வெற்றி வரலாற்று சிறப்பு வாய்ந்தது . ராகுல் டிராவிட் மற்றும் லக்ஷ்மணன் கொல்கத்தா இன்னிங்ஸ் லைவ் பார்க்காத நபர்களுக்கு அடிலெய்டு டெஸ்ட் ஒரு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

டிராவிட் – இலட்சுமணன் இணை அபார ஆட்டம் என்ற டேக்லைன் அன்றைய செய்திகளில் ஜொலித்தன.

ஏதோ ஒரு தமிழ் நாளிதழில் பெரிய எழுத்துக்களில்

” சிங்கத்தின் குகையிலயே சென்று சிங்கத்தை வென்ற இந்தியா “

என்ற டைட்டிலில் ராகுல் டிராவிட் தொப்பி அணிந்து கொண்டு கவர்ல (நினைவு சரியா இருந்தால்) அடிக்கிற ஷாட் போட்டோ போட்டு வந்தது.

இந்த தொடரின் ஒவ்வொரு போட்டி முடிவிலும் கிரிக்கெட் நுணுக்கங்கள் பற்றி தேட ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமாக வெறும் பார்வையாளராக இல்லாமல் நாமளும் நல்ல ஒரு கிரிக்கெட் பிளேயரா மாறனும் என்ற எண்ணம் வந்தது.

இந்தியா அடுத்த போட்டியில் தோல்வி அடைந்தது , அந்த நேரத்தில் சச்சினின் பார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அப்பொழுது ஏன் சச்சின் மேல மட்டும் இவ்வளவு எதிர்பார்ப்பு என்ற கேள்வி எழுந்தது அதை ஒரு சீனியர் கிரிக்கெட் வீரர் கிட்ட கேட்கும்போது இங்க சச்சின் எல்லா மேட்ச்சும் சதம் அடிச்சா தான் அமைதியா இருப்பாங்கனு சொன்னது கேட்டு சச்சின் எந்த அளவிற்கு தன்னுடைய தரத்தினை வைத்துள்ளார் என்று புரிந்தது.

நான்காவது போட்டியின்போது சச்சின் இரட்டை சதம் அடித்தார்.அந்த சதத்தில் கவர் டிரைவ் முடிந்த வரை முயற்சி செய்யாமல் ஆடினார் என்பது பிற்காலத்தில் தான் தெரிந்து வியந்த விஷயம்.

அகாகர்கரின் ஆறு விக்கெட் , சேவாக் அதிரடி , பார்த்திவ் கீப்பிங் ,கும்ப்ளே கோபம் , டிராவிட்டின் தடுப்பாட்டம், கங்குலியின் ஆக்ரோஷம் , இலட்சுமணின் புல் ஷாட் , அம்பயர்களின் தவறான முடிவுகள், இறுதி டெஸ்ட்டில் ஸ்டிவ்வாக்கின் கேட்ச்சை சச்சின் பிடித்தது , அரங்கு நிறைந்த டெஸ்ட் போட்டிகள் என பல்வேறு விதமான நினைவுகள்.

2003க்கு பிறகு பல டெஸ்ட் தொடர்கள் நடந்து விட்டன. வீரர்கள் மாறினர் , கேப்டன்கள் மாறினர் , விளையாட்டு முறை மாறியது என பல மாற்றங்கள் ஆனாலும் அந்த தொடர் என்றும் நினைவில் அழியாமல் இருக்கும்.

இந்த முறை பார்டர் -கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள் .

Related posts

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஐந்து கோடி ரூபாய் போனஸ்..!

Penbugs

வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும் – நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

Penbugs

ரம்ஜான் வாழ்த்துகள்: கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: பிரதமர் மோடி…!

Penbugs

மொழி – ஓர் உந்துதல் !!

Shiva Chelliah

முகநூலில் சுயவிவரங்களை லாக் செய்யும் புதிய வசதி இந்தியாவில் அறிமுகம்!

Kesavan Madumathy

மனிதம் வளர்ப்போம்!

Dhinesh Kumar

பேட்ட பராக்!

Shiva Chelliah

பழனி முருகன் கோயிலில் மொட்டையடித்த நடராஜன்

Penbugs

பரோட்டாவிற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி…!

Kesavan Madumathy

நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க இந்தியா அனுமதிக்காது – நிதின் கட்காரி

Penbugs

தோனி புதிய இந்தியாவின் அடையாளம்-பிரதமர் மோடி

Penbugs

Leave a Comment