சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் ஓட்டலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
தொகுப்பாளராக இருந்து பின்னர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தவர் சித்ரா.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தவர் சித்ரா. இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில் அதிகாலை படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பியவர், திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை அருகே தனியார் ஓட்டலில் தங்கி இருந்தார்.
அப்போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ராவின் மறைவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Toxic environment: The Ellen Show is under investigation