Coronavirus

மருத்துவர் பரிந்துரையின்றி ஹைட்ராக்சி குளோரோகுயினை உட்கொள்ளாதீர்கள் – சுகாதாரத்துறை

கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை, பொது மக்களுக்கு தகுந்த மருந்துவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.

சமூக ஊடகங்களில் கொரோனா வைரஸ் குறித்தும், சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளின் இருப்பு, பயன்படுத்தும் முறை பற்றி பல தவறான தகவல்கள் பரப்பபட்டு வருகின்றன. மக்களும் பல்வேறு நகரங்களில் தாங்களாகவே ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை உட்கொண்டு பாதிப்புக்கு ஆளானதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் டுவிட்டரில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பரிந்துரைப்படி வழங்கப்பட வேண்டிய மருந்து, இதனை மருத்துவர் பரிந்துரையின்றி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். இம்மருந்து எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட பிற நோயாளிகள், கொரோனா பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த வீட்டு உறுப்பினர்களுக்காக போதுமான அளவு ஹைட்ராக்சி குளோரோகுயின் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இம்மருந்து அவர்களுக்கானது மட்டும் தான். பிற பொது மக்களுக்கு தேவையில்லை. மருத்துவர் பரிந்துரையின்றி சுயமாக இம்மருந்தை எடுத்துக்கொண்டால் மோசமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என எச்சரித்துள்ளது.

Related posts

Chile: Police trains Sniffer dogs to detect COVID19 in early stages

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்1,437 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் ப்ரணீதா

Penbugs

ஏடிஎம் மூலம் பரவிய கொரோனா: 3 ராணுவ வீரர்கள் பாதிப்பு – அதிர்ச்சிகொடுத்த ட்ராக் ஹிஸ்டரி

Penbugs

சென்னை விமான நிலைய புறப்பாடு நேரங்கள் அறிவிப்பு

Penbugs

Air India Express: Pilot and Co-pilot dead after crash

Penbugs

தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பினார் விஸ்வநாதன் ஆனந்த்!

Anjali Raga Jammy

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

Penbugs

ரூம் கிடைக்கவில்லை .. மலைக் குகையில் ரகசிய வாழ்க்கை! வனத்துறைக்கு அதிர்ச்சிகொடுத்த சீன பயணி

Penbugs

வீட்டிலேயே, எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 6110 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs