Coronavirus

மோடி நல்லவா் என்று கூறினால் ரேஷன் பொருள் கிடையாது: காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் சா்ச்சை

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமா் நரேந்திர மோடியை நல்லவா் என்று கூறிய பெண்ணுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்று காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவா் கூறிய சம்பவம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ராஜஸ்தானின் சித்தூா்கா் மாவட்டத்தில் ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர சிங் பிதூரி பங்கேற்று பொருள்களை வழங்கினாா்.

அப்போது, பொதுமக்களை நோக்கி மோடி நல்லவரா அல்லது மாநில முதல்வா் அசோக் கெலாட் நல்லவரா? என்று ராஜேந்திர சிங் கேள்வி எழுப்பினாா்.

கூட்டத்தில் இருந்த ஒரு பெண், ‘மோடிதான் நல்லவா்’ என்று பதிலளித்தாா்.

இதையடுத்து, அவரை சுட்டிக்காட்டிப் பேசிய எம்எல்ஏ, ‘நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் மோடி என்று பதிலளித்துள்ளீா்கள். எனவே, நீங்கள் வீட்டுக்குச் சென்று விளக்கேற்றலாம்; உங்களுக்கு ரேஷன் பொருள் கிடையாது’ என்றாா். இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக, மாநில பாஜக தலைவா் சதீஸ் பூனியா, காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியுள்ளாா். காங்கிரஸ் அரசு மக்களிடம் அரசியல்ரீதியாக பாரபட்சம் காட்டுவதற்கு இது சிறந்த உதாரணம் என்று அவா் கூறியுள்ளாா்.

Related posts

தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா

Penbugs

தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

14YO sexually assaulted by two teens in COVID19 centre

Penbugs

PSG’s Neymar tests positive for coronavirus

Penbugs

COVID19: Dubai Hospital waives off Rs 1.52 crores bill of Indian man

Penbugs

தமிழகத்தில் இன்று 3859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா பரவல் புதிய கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள் அறிவிப்பு

Anjali Raga Jammy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Monkeys take over swimming pool in Mumbai residential complex

Penbugs

COVID19 in Chennai: 1st Police official who tested positive, recovers, joins duty today

Penbugs

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Kesavan Madumathy

Priest beheads a man in Odisha claiming to put an end to Coronavirus

Penbugs