Coronavirus

தமிழகத்தில் புதிதாக 526 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 526 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் உள்ளிட்டவை பற்றிய சமீபத்திய தகவலை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் புதிதாக 526 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 360 பேர் ஆண்கள், 166 பேர் பெண்கள். இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 4 பேர் கொரோனா தொற்றால் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் 219 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,824 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 12,999 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதிக்கப்பட்ட நபர்கள் 2,19,406. இன்றைய தேதியில் மொத்தம் 4,664 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related posts

கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா…!

Penbugs

Unlock 3: Lockdown extended till AUG 31 in containment zones; new guidelines announced

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2115 பேர் பாதிப்பு …!

Penbugs

India likely to pull out of tri-series due to increasing COVID19 cases

Penbugs

Sandeep Lamichchane becomes 4th Nepal player to test positive for Covid-19

Penbugs

தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

ஊரடங்கில் திருமணம்: சர்ச்சை கிளப்பிய முன்னால் முதல்வர் வீட்டு திருமணம்

Penbugs

திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையை முதலமைச்சர், துணை முதலமைச்சர் இன்று ஆய்வு!

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு

Kesavan Madumathy

சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி.

Penbugs

கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 61.13 சதவீதமாக ஆக உயர்வு

Penbugs

தமிழகத்தில் இன்று 5596 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs