Penbugs
Coronavirus Editorial News

ஏசி அல்லாத 200 ரயில்கள் வருகிற ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சர்

வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தினமும் 200 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்த பின்னர் கடந்த மார்ச் மாதம் முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

வெளிமாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்பதற்காக மே ஒன்றாம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து 15 நகரங்களுக்கு கடந்த 12 ஆம் தேதி ஏசி பெட்டிகள் கொண்ட ரயில் சேவை முதல்கட்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிலையில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஏசி பெட்டிகள் இல்லாமல் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

தினமும் 200 ரயில்கள் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும், இதற்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் மட்டும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விரைவில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் வகுப்பு டிக்கெட் கட்டணத்துடன் கூடிய இந்த ரயிலில் அனைவரும் பயணிக்க முடியும் என்றும், எந்தெந்த இடங்களில் இருந்து ரயில் சேவை தொடங்குகிறது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன் நாளொன்றுக்கு 12 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Related posts

COVID-19 update: Chennai, Erode, Kanchipuram under lockdown till March 31

Penbugs

UP Police files FIR on Scroll.in’s Executive Editor for reporting impact of lockdown

Penbugs

கொரோனா: வீடு வீடாக கணக்கெடுக்க உத்தரவு!

Kesavan Madumathy

டாஸ்மாக் நாளை திறப்பு!

Penbugs

Growth achieved by Larsen & Toubro in a challenging year

Penbugs

Dalit man beaten-up in Karnataka for allegedly touching an upper caste man’s bike

Penbugs

டிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு 75000 கோடி முதலீடு – சுந்தர் பிச்சை

Kesavan Madumathy

Facebook pledges $100 million to small businesses impacted by coronavirus

Penbugs

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி

Kesavan Madumathy

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Kesavan Madumathy

COVID19: Gibbs to auction bat he used for chasing 438

Penbugs

நிர்மலா சீத்தாராமன் பேட்டியின் முக்கிய அம்சங்கள் :

Kesavan Madumathy