Coronavirus

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் தளர்வற்ற முழு ஊரடங்கு

தமிழ்நாடு முழுவதும், இன்று ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஜூலை மாதத்தை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்திலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, நள்ளிரவு முதல், முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. பால் விநியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவமனை ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

அரசு வாகனங்கள் தவிர, பிற, அனைத்துவகை தனியார் வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது. அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன.

முழு ஊரடங்கு நாளான இன்று சென்னையில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். அவசியமின்றி வெளியில் வருபவர்களை பிடித்து, அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்வதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கும் தொடரப்படும் என போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை சென்னையில் தேவையின்றி வெளியில் சுற்றியதாக சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த நடிகர் சிவகுமார் குடும்பம்

Kesavan Madumathy

Cricket during COVID19: Umpires disinfect ball as Sibley uses saliva to shine

Penbugs

AIIMS doctor puts own life at risk, removes safety gear to help critically-ill COVID-19 patient

Penbugs

செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு

Penbugs

India invites developers to create Zoom alternative; 1 Crore prize money

Penbugs

Ahead of Diwali, Chennai’s Ranganathan Street sees huge crowd

Penbugs

தமிழகத்தில் இன்று 3859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்

Penbugs

BCCI to donate 51 crores to PM CARES fund

Penbugs

ஊஹானில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்ததாக அதிகாரிகள் தகவல்

Penbugs

Asia Cup 2020 officially cancelled, confirms BCCI president Ganguly

Penbugs

மகாராஷ்டிராவில் 714 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி!

Penbugs

Leave a Comment