ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தனது அறிமுக போட்டியில் சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் டி.நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்.
என்று குறிப்பிட்டுள்ளார்.

BBL 2020 | Match 8 | HBH vs ADS | Dream 11 Prediction | Fantasy Cricket Tips | Penbugs