Cinema Coronavirus

திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி

திரையரங்குகளில் நூறு சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட உத்தரவை வெள்ளிக்கிழமை தமிழக அரசு ரத்து செய்தது.

கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த மாா்ச் மாதம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

பொதுமுடக்கத் தளா்வுகளில், திரைத்துறையினரின் தொடா் கோரிக்கைகளைத் தொடா்ந்து, படப்பிடிப்பு, 100 சதவீத பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கி திரையரங்கம் திறப்பு என படிப்படியான அனுமதிகள் வழங்கப்பட்டன.

இதற்கு மருத்துவ நிபுணா் குழுவினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய உள்துறைச் செயலாளா் அஜய் பல்லா தலைமைச் செயலாளா் க.சண்முகத்துக்கு கடிதம் எழுதினார்.

பின், வெள்ளிக்கிழமை காலை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்த வழக்கில், ஜனவரி 11ஆம் தேதி வரை 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தடைவிதித்து, அதற்குள் தமிழக அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டது.

இந்நிலையில், நூறு சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்வதாக தமிழக அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ளவும் திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Oviya-Arav will be seen together in a movie!

Penbugs

Kamal unveils Darbar Tamil motion poster!

Penbugs

Genelia, Riteish pledges to donate their organs!

Penbugs

வினோத் எனும் கதை படைப்பாளி.

Kumaran Perumal

16YO TikTok star Siya Kakkar dies by suicide

Penbugs

The Kissing Booth

Penbugs

Happy Birthday, Thala!

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

Penbugs

Kadaisi Vivasayi trailer: Authentic, hard-hitting and witty!

Penbugs

COVID19: 15YO Golfer Arjun Bhati sells all his 100+ trophies, raises Rs 4.30 Lakh

Penbugs

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று; சுகாதாரத்துறை

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,617 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment