Coronavirus

தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர பொதுமுடக்கம்; ஞாயிற்றுக்கிழமை முழுப் பொதுமுடக்கம் அறிவிப்பு

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஏப்ரல் 20 முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இணையவழி வகுப்புகள் மட்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நாட்களில் பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை உணவகங்களில் பார்சல் மட்டும் வாங்கிச் செல்லலாம்.

அமர்ந்து சாப்பிட முடியாது. ஞாயிறு அன்று காய்கறி கடைகள் திறந்திருக்கும்.

அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படும்.

தேநீர், பலசரக்கு, உணவகம், வணிக வளாகங்கள், ஜவுளி மற்றம் நகைக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும்.

சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. திருவிழா, குடமுழுக்கு நடத்தக்கூடாது.

இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஞாயிறுக்கிழமைகளில் அனுமதி இல்லை.

திரையரங்கு விதிகளை பின்பற்றாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊரடங்கின் போது தனியார் பஸ், ஆட்டோ, கார் செல்ல அனுமதி இல்லை.

ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைகள் செயல்படாது. ஞாயிறு அன்று பால், பத்திரிகை விநியோகம், அமரர் ஊர்திகளுக்கு அனுமதி உண்டு.

ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள், காய்கறி கடைகள் இரவு 9 மணி வரை இயங்கலாம்.

Related posts

தமிழகத்தில் இன்று 5177 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தொல் திருமாவளவன் அவர்களின் அக்கா கொரோனா தொற்றால் மரணம்

Penbugs

10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ; சிபிஎஸ்இ அறிவிப்பு…!

Penbugs

Return of favour: Jason Holder wants England to tour Windies by end of year

Penbugs

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து – அனைவரும் தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!

Kesavan Madumathy

சென்னை – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 5501 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Sohail Tanvir tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 5572 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID-19: Chennai Corporation’s containment plan

Penbugs

கொரோனா: கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி உட்பட 3 பேர் உயிரிழப்பு!

Penbugs

Leave a Comment