அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59இல் இருந்து 60ஆக உயர்த்தப்படுவதாகவும் அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், கல்வி நிறுவன ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மே 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. இந்த வயது வரம்பை கொரோனா காலத்தில் கடந்த ஆண்டு 59ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

MS Dhoni was a special man in the run chase: Michael Holding