Penbugs
CoronavirusEditorial News

ATM இயந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்

கொரோனா பரவலைத் தடுக்க ஏடிஎம் இயந்திரத்தை தொடாமலேயே கியூ ஆர் கோட் மூலம் பணத்தை எடுக்கும் வசதி விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிசர்வ் வங்கியால் அங்கீகரிப்பட்ட ”எம்பேஸ் பேமண்ட் சிஸ்டம்” ( Empays Payment Systems ) என்ற நிறுவனம் பிரபல மாஸ்டர் கார்ட் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த கார்ட் லெஸ் ATM சேவையை வழங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வசதியை பயன்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏடிஎம்கள் தயார் செய்யப்படவுள்ளதாக மாஸ்டர் கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி வாடிக்கையாளரின் செல்போனில் உள்ள வங்கியின் நெட் பேங்கிங் செயலியை திறந்து, கார்ட் லெஸ் ATM வசதி இருக்கும் இயந்திரத்தில் காட்டும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்த பின் எடுக்க வேண்டிய தொகையை செயலியிலேயே பதிவு செய்தால் போதும் பணம் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரம் மூலம் நோய் பரவுவதை தடுக்கலாம் என நம்பப்படுகிறது.