கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவின் பிரபல ஐபிஎல் போட்டிகள் அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்காக அணிகள் அமீரகம் கிளம்பிச் சென்றுள்ளனர்.
தோனி, ரெய்னா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதியன்று துபாய்க்கு கிளம்பிச் சென்றனர்.
அங்கு 6 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு பிறக்கு ஆகஸ்ட் 28ம் தேதி பயிற்சியை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தங்களின் தனிமைப்படுத்துதலை மேலும் சில நாட்களுக்கு சென்னை அணி நீட்டித்துள்ளதாகவும், இன்றைக்கு பதிலாக செப்டம்பர் 1 முதல் பயிற்சியை தொடங்குவர் எனவும் தெரியவந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கும் அணியின் ஊழியர்கள் 12 பேருக்கும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.