Penbugs
Cinema

ஜிப்ஸி – Movie Review

ஒரு நாடோடி இசை கலைஞனுக்கும் ஒரு இசுலாமிய பெண்ணிற்கும் உண்டான அதீத காதலை ஒட்டியே இந்த கதை எடுக்கப்பட்டுள்ளது..

இந்த நாடோடி இளைஞர், காஷ்மீரில் குண்டு வெடிப்பில் இறந்த ஒரு தம்பதியினருக்கு பிறந்த மகன், இவரை ஒரு குதிரைகாரர் எடுத்து வளர்த்ததால் அவரும் குதிரையுடன் சேர்ந்தே வளர்கிறார் ..!

குதிரையை வைத்து பாட்டு பாடி பல புரட்சி பாடல்களை பாடி ஊர் ஊராக சுற்றி வருகிறார், இந்த நிலையில் அவரின் வளர்ப்பு தந்தை இறக்கவே தனி மரமாகும் தருவாயில் கதாநாயகியை சந்திக்கிறார்..

இப்படியாக கதை நகர்ந்து காதல் படர்ந்து இருக்கையில் கதாநாயகியின் வீட்டில் நிக்கா நடத்த முற்படும்போது, பெண், ஜீவாவுடன் வெளி வந்து விடுகிறார்..!

அவர்கள் தங்களின் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கையை வாழ்ந்து நன்றாக சென்று கொண்டிருக்கும் போது ஒரு மதக்கலவரம் காரணமாக அவர்கள் பிரிக்க படுகிறார்கள் .!

அதிலிருந்து மீண்டார்களா இல்லையா என்பதே கதையின் முடிவு..!

பொதுவாக ராஜு முருகன் படைப்பில் சில சமூக அக்கறையான விஷயங்கள் இருக்கும், அதே பாணியில் இதிலும் பகவத் கீதை, குர்ஆன் மற்றும் பைபிள் போன்ற அனைத்து சித்தாந்தங்களையும் படித்து உணர்ந்தவனாக நாயகன் திகழ்கிறார்..

ஆங்காங்கே அவர் உதிர்க்கும் சில கருத்துக்கள் சமூக அவலங்களையும், அதன் தாக்கத்தையும் சுட்டி காட்டுகிறது .

படத்தின் நாயகன் ஜிப்ஸி ..! மீசை மற்றும் குருந்தாடியுடன் அவர் பாடும் ஆடும் ஆட்டத்திற்கு நம்மையும் அறியாமல் நம்மை படத்தில் ஈடுபட வைத்துள்ளார்..!

அவர் பாடல் காட்சிகளில் சிறப்பாகவும் தன் காதலிக்காக எதையும் செய்ய முற்படும் மிடுக்கும் படத்திற்கு அவர் அளித்த மிகப்பெரிய பங்கு..!

வாஹிதா, கதையின் நாயகி சில இடங்களில் அழகாக நடித்துள்ளார்..!

படத்தில் “சே” குதிரை ஆடுவது மற்றும் தன் முதலாளிக்கு எல்லாம் செய்வது என்று தன் பங்கை அளித்துள்ளது..!

படத்தின் இசையைப்பாளர் சந்தோஷ் நாராயணன்..! இசையில் நம்மை வழக்கம் போல் கட்டி போட்டுள்ளார்..! இது முழுக்க முழுக்க இசையை சார்ந்த மற்றும் மனிதம் சார்ந்த காதல் படம்..!
இந்த படத்தின் மூலம் லண்டன் இசை பாடகி சுசீலா ராமன் தனது பாடலை கோலிவுட்டில் பதிவு செய்துள்ளார்..

இந்த படத்தின் மூலம் செல்வகுமார் நம்மை இமயம் முதல் குமரி வரை ஒரு குதிரை சவாரியாக தனது ஒளிப்பதிவு மூலம் அழைத்து சென்றுள்ளார் என்பதே மிகை..!

படத்தில் பல இடங்களில் பாடல்கள் தொய்வு அளித்தாலும் காட்சிகள் நம்மை இருக்கையில் அமர வைக்கிறது..!

முக்கியமாக படத்தில் பல காட்சிகள் சில காரணத்திற்காக கருப்பு வெள்ளை நிறத்தில் காண்பிக்கப்பட்டது படத்தில் ஒரு சிறு குறையாக இருக்கிறது..!

படத்தில் பல காட்சிகள் தணிக்கை குழுவினர் நீக்கப்பட்டு விட்டது படத்தில் சிறு சிறு இடத்தில் தெரிகிறது..!

மொத்தத்தில் ராஜு முருகன் தனது பாணியில் சமூக மற்றும் மதம் சார்ந்த விஷயங்களை தெரிவித்துள்ளார்..!

“மனிதம் தான்டி புனிதம் இல்லை வா..!
இதயம் தான்டி இறைவன் இல்லை வா..! ”

இந்த பாடல் வரிகளிற்கு ஏற்றார் போல் படம் அமைந்துள்ளது..!

மனிதம் போற்றப்பட வேண்டும்..!

Related posts

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதீப்குமார்!

Shiva Chelliah

Four men die while cleaning the sewage tank

Penbugs