Penbugs
Editorial News

மார்ச் 31க்குள் பான் கார்டு ஆதார் இணைப்பு கட்டாயம்

பான் கார்டை வரும் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்‍காவிட்டால் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் பான்கார்டு செயலிழப்பு செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான இறுதிக்கெடு கடந்த ஆண்டு ஜூன் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுயிருந்தது.

கொரோனா பரவல் காரணமாக இதற்கான காலவரம்பு நடப்பாண்டு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த காலவரம்பை மேலும் நீட்டிக்க முடியாது என தெரிவித்துள்ள மத்திய அரசு, வரும் 31ம் தேதிக்குள் அனைவரும் பான் கார்டுகளை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

அவ்வாறு இணைக்‍காவிட்டால் சம்பந்தப்பட்டவர்களின் பான் கார்டு, அடுத்த மாதம் 1ம் தேதி முதல் செயலிழப்பு செய்யப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அத்துடன், பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களிடம், வருமான வரி சட்டத்தின் கீழ் ரூ. 10,000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லிங்க் :

https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html

.

Related posts

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

Kesavan Madumathy

ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு

Kesavan Madumathy

Deadline for Aadhar-Pan card linking extended

Penbugs

Leave a Comment