Coronavirus

கேரளாவில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்வு

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக கேரளா உள்ளது. அங்கு நாள்தோறும் பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி கேரள மாநிலம், சிவப்பு, ஆரஞ்சு ஏ, ஆரஞ்சு பி மற்றும் பச்சை ஆகிய 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு மண்டலத்தின் கீழ் அதிகம் பாதிக்கப்பட்ட காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்கள் வருகின்றன.

இந்த மாவட்டங்களில் தற்போதைய கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களும் முழுமையாக சீலிடப்பட்டு, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லவும், வெளியேறவும் 2 வழிகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளன.

பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் கொல்லம் மாவட்டங்கள் ஆரஞ்சு ஏ பிரிவில் வருகின்றன. ஆலப்புழா, திருவனந்தபுரம், பாலக்காடு, வயநாடு மற்றும் திருச்சுர் மாவட்டங்கள் ஆரஞ்சு பி பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆரஞ்சு ஏ, ஆரஞ்சு பி ண்டலங்களில் தனியார் வாகனங்களை மாவட்ட எல்லைகளுக்குள் மட்டும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒற்றை இலக்க எண்களை கொண்ட வாகனங்கள் குறிப்பிட்ட நாட்களிலும், இரட்டை இலக்க எண்களை கொண்ட வாகனங்கள் குறிப்பிட்ட நாட்களிலும் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படும். உணவகங்களில் இரவு 7 மணி வரை வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட உள்ளது.

பேருந்துகளில் செல்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், நின்று கொண்டு செல்ல யாருக்கும் அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான விவசாயப் பணிகள் மற்றும் ஊரக வேலைஉறுதி திட்ட பணிகள் தனிமனித இடைவெளியுடன் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு ஏ பிரிவின் கீழ் வரும் மாவட்டங்களில் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் கட்டுப்பாடு தளர்வுகள் நடைமுறைக்கு வருவதாகவும், ஆரஞ்சு பி பிரிவின் கீழ் வரும் மாவட்டங்களில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பச்சை நிற மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ள கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஏப்ரல் 20 முதல் கட்டுப்பாடுகள் அதிகளவில் தளர்த்தப்பட உள்ளன. எனினும் விமான, ரயில் போக்குவரத்துக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைவழியாக வேறு மாவட்டங்களுக்கு பயணிக்கவும் தடை விதிக்கப்பட்டுளள்து. கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள் ஆகியவற்றுக்கான தடையும் தொடரும் என அறிக்கப்பட்டுள்ளது. மத வழிபாடுகளுக்கான தடையும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு

Penbugs

ஏஐசிடிஇயின் பெயரில் போலி மின்னஞ்சல் : துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு

Penbugs

COVID-19: Chennai Corporation’s containment plan

Penbugs

சென்னையில் தன்னார்வலர்கள் எப்படி உதவிகளை வழங்கலாம் என்ற நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

Penbugs

COVID19 in TN: 509 positive cases

Penbugs

கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு சோதனை துவக்கம்

Penbugs

New Zealand ‘achieved elimination’, lockdown restrictions relaxed!

Penbugs

கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா…!

Penbugs

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

Yogi Babu helps small screen technicians

Penbugs

நாடு முழுவதும் 17 எம்பிக்களுக்கு கொரோனா உறுதி

Penbugs

தமிழகத்தில் இன்று 3859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs